Rajini planning for a true democratic party

இந்தியாவிலேயே சிறந்த ஜனநாயகக் கட்சி… மாஸ்டர் ப்ளானுடன் ரஜினிகாந்த்!


சென்னை: சிஸ்டம் சரியில்லை என்று 80களிலேயே ஓங்கி குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். அதை மீண்டும் மீண்டும் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி என பாரபட்சம் இல்லாமலும் சொல்லி வந்துள்ளார். தனது அரசியல் அறிவிப்பின் போது தமிழகத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் கேள்வி ஒன்றுக்கு, தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார் ரஜினிகாந்த். ஆளும் கட்சி அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி என்ன எஞ்சீனியரா என்று கேட்டுள்ளார். ரஜினியின் தீவிர அரசியல் நடவடிக்கைகளால் அதிமுகவில் பதட்டம் அதிகரித்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு பக்கம், ஒரு பத்திரிக்கை விஷமத்தனமாக ரஜினி மக்கள் மன்றத்தில் பதவிகள் விற்பனை செய்யப்படுகிறது என்று அவதூறு பரப்பியுள்ளனர். அவர்களுடைய ஒரு தலைப்பட்சமான கமல்ஹாசன் சார்பு நிலைமை உலகம் அறிந்தது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காமல், கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னவர்களாச்சே!

இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத ரஜினிகாந்த், மன்ற உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, முழு விவரமும் ரஜினியின் பார்வைக்கு செல்கிறது. நாள் தோறும் மாவட்டம், நகரம், ஒன்றியம் , தொகுதி வாரியாக எவ்வளவு பேர் பதிவு செய்துள்ளார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்.

ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படாத மாவட்டங்களிலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிர்வாகிகளுடன் தலைமை மன்றம் சார்பில் தொடர்பு கொண்டு உற்சாகப் படுத்தி வருகிறார்கள். சாஃப்ட்வேர் தயார் செய்து கொண்டு களத்தில் இறங்கிய முதல் இந்திய அரசியல்வாதி ரஜினியாகத் தான் இருக்க வேண்டும்.உடனுக்குடன் ரிப்போர்ட்கள் அவர் பார்வைக்கு வருகின்றன.

அதிகாரப் பூர்வமாக கட்சி அறிவிக்கும் முன்னர், உறுப்பினர் சேர்க்கையை தமிழகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டிவிட நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ரஜினி மக்கள் மன்றம் அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்ட உடன், முதல் வேலையாக உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்து விட திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களை மன்றத்தில் சேருங்கள் என அறிவுறுத்தியுள்ளார். அதற்கு ஏற்றார்போல் பெண்கள் காட்டும் ஆர்வம் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.

தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளும், உட்கட்சி தேர்தலை சந்தித்து தான் கட்சிப் பதவிகளை அடைய வேண்டும் என்பது தான் ரஜினியின் நிலைப்பாடு. ரசிகர் மன்றத்தில் விசுவாசமாக இருந்தவர்களுக்கு நியமனம். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு அரசியல் உயர்வு. இது தான் ரஜினியின் திட்டம்.

அதனால் பொதுத் தேர்தலை சந்திக்கும் முன்னதாகவே, உட்கட்சி தேர்தலை முடித்து விட விரும்புகிறாராம். உண்மையான ஜனநாயகக் கட்சியாக மக்கள் மன்றத்தில் வாக்கு கேட்கப் போகிறாராம்.

அதாவது சரியான சிஸ்டத்தை முதலில் தன்னுடைய கட்சியில் அமல்படுத்தி, தமிழக அரசியல் சிஸ்டத்தை மாற்றப் போகிறார் ரஜினிகாந்த்.

– ‘ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!