அரசியல் தலைவர் ரஜினிகாந்த்.. தமிழகத்திற்கு நல்ல மாற்றம் வரட்டும்! - VanakamIndia

அரசியல் தலைவர் ரஜினிகாந்த்.. தமிழகத்திற்கு நல்ல மாற்றம் வரட்டும்!


நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தலைவர் ரஜினிகாந்த் ஆக அவதாரம் எடுத்த நாளில் நானும் நேரில் காணும் பாக்கியம் பெற்றேன். என்ன ஒரு மாஸ். என்ன ஒரு எனர்ஜி. சான்ஸே இல்லே..

ஒரு தலைவருக்கு முதலில் இப்படிப்பட்ட எனர்ஜி தானே முதல் தேவை. தினம் 1000 பேருடன், அதே புன்னகையுடன் புகைப்படம் எடுக்க யாராலும் முடியுமா? “இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பென்சில் மாதிரி எப்படி நேரா நிக்கிறாரு பாருங்க.”ன்னு நண்பர் சொன்னார். உண்மைதானே, ஒரு வளைவு இல்லை, நெளிவு இல்லை, சுளிப்பு இல்லை.

இன்றைய நாளில், இப்படி ஒரு புன்னகையுடன், மணிக்கணிக்கில் மக்களை சந்திக்கும் அரசியல்வாதிகள் யாரும் கிடையாது. ரசிகர்களைப் போல் பொதுமக்களையும் சந்திக்கத் தானே அரசியலுக்கு வருகிறார்.

இந்த மனிதரைப் போய் ‘ரஜினிக்கு உடம்புக்கு முடியவில்லை. கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிச்சிகிட்டு ஒதுங்கிடனும்ன்னு ஒரு பிரபல ஊடகத்தில் எழுதினாங்களே’ மனசாட்சியே இல்லையா?

என்ன ஒரு பேச்சு. அப்படியே ஊடகக்காரங்களை லைட்டா ஒரு போடு போட்டாரு பாருங்க.. நியாயமா கேள்வி கேக்குறவங்க, எழுதுறவங்க, விமர்சனம் பண்ணுறவங்க யாருக்கும் எந்த ஃபீலிங்கும் இருக்கப் போவதில்லை. அவரு சொன்னதுலே தப்பும் ஏதும் இல்லையே. என்னதான் இருந்தாலும், முதலாளிங்களும், மேல்மட்ட ஆசிரியர்களும் செய்யற முடிவுக்கு கீழே வேலை பாக்கும் செய்தியாளர்கள் பொறுப்பு இல்லையே!

அதான் செய்தியாளர்களுக்கான தனிச் சந்திப்பு ஏற்பாடு பண்ணி கலந்துரையாடி இருக்காரு. ஒவ்வொருத்தரா கூப்பிட்டு பேசினாராம். எங்க எடிட்டரு மட்டும் போயிட்டு, என்ன கழட்டி வுட்டுட்டாருங்க.. அடுத்த சான்ஸ் வாங்கித் தர்றாராம்.. அட, பத்திரிக்கைக்காரங்களும் மனுசங்க தானே.. தமிழ்நாடு நல்லா இருக்கனும்னு நினைக்கிறவங்க தானே.அதான் ஒட்டு மொத்தமாக சீனியர் செய்தியாளர்கள்,ஆசிரியர்கள்ன்னு போய் பாத்துட்டு வாழ்த்து தெரிவிச்சுட்டு வந்துருக்காங்க.

நீங்க வாங்க ரஜினி சார். தமிழ்நாட்டுலே மாற்றம் கொண்டு வாங்க. தமிழ்நாடு நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிற செய்தியாளார்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலார்கள் எல்லாம் உங்க கூட இருப்பாங்க..

போலாம் ரைட்…. வாழ்த்துகள் ரஜினி சார்…

– ‘ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!