கிடைச்ச மேடையில் எல்லாம் பேசுறதுக்கு அவரு கட்சிப் பேச்சாளரா? தலைவா! - VanakamIndia

கிடைச்ச மேடையில் எல்லாம் பேசுறதுக்கு அவரு கட்சிப் பேச்சாளரா? தலைவா!

Chennai: DMK Working President M K Stalin along with actor-filmmaker Kamal Haasan presenting memento to Superstar Rajnikanth at the Diamond Jubilee celebration of the party’s mouthpiece ‘Murasoli’ in Chennai on Thursday. PTI Photo by R Senthil Kumar(PTI8_10_2017_000199B)

சென்னை: முரசொலி பவள விழாவில் கமல் ஹாசனின் குதர்க்கமான பேச்சை கேட்டு ரஜினி ரசிகர்கள் வருத்தபட்டுக் கொண்டும், ஆத்திரப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். கமலை ரஜினியின் நல்ல நண்பனாக நினைக்கும் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். தலைவர் மட்டும்தான் எனக்கு முக்கியம் என்று எண்ணும் ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

கண்ணாடியில் தன்னைப் பார்த்த கமல் ஹாசன், விழா அழைப்பிதழைப் பார்த்திருந்தால் அந்த கேள்வி வந்திருக்காது. அழைப்பிதழில் ரஜினி பெயர் இல்லை என்றாலே அவர் பேச மாட்டார் என்று தெரியாதா? பேசுவாரா என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் கேட்கவும் வேண்டுமா என்ன?

கிடைக்காத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பயன்படுதிக்கொள் என்று கண்ணாடி சொன்னதாம். முரசொலி பத்திரிக்கை 75 ஆண்டுகள் கொண்டாடுவது பத்திரிக்கை உலகத்திற்கே மகிழ்ச்சியான செய்திதான். ஆரம்பித்தவர் இன்னும் அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுவும் பெருமைதான்.

ஆனால் விழா நடத்தியது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். தந்தைக்காக விழா எடுக்கும் மகன் என்று பெருமைப்படலாம். உடன் மூன்றாம் தலைமுறை உதய நிதியும் முன்னிலைப்படுத்தப்பட்டதுதான் உறுத்தலாக இருக்கிறது.

உதயநிதியை தவிர, அந்த மேடையில் பத்திரிக்கை உலகத்திற்கு சம்மந்தமே இல்லாமல் பேச அழைக்கப் பட்ட ஒரே ஒருவர். அவர் சாட்சாத் கமல் ஹாசன் மட்டுமே.

வந்தவர் தனக்கும் கலைஞருக்கும் உள்ள உறவைப் பற்றி பேசினார். முரசொலி வாசித்து இருந்தால் அதைப் பற்றி பேசியிருக்கலாம். தற்காப்பை விட தன்மானம்தான் முக்கியம் என்று முனகியிருக்கிறார்.

அதாவது முரசொலி மேடையில் பேசியது அவருக்கு தன்மானத்தை கொடுத்துள்ளதா.. தற்காப்புக்காக ரஜினி பேசவில்லையா . அவர் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன. இவர் என்ன தான் சொல்ல வருகிறார்?

கலைஞர் முதல்வராக இருந்த போது, அஜீத் அவரிடம் முறையிட்ட உடன், எழுந்து நின்று கைத் தட்டி ஆதரவு தெரிவித்தவர்தானே ரஜினி. அன்றைக்கு, எதுவுமே பேசாமல், கைத்தட்டல் மூலம் மட்டுமே தமிழ் திரையுலகின் தன்மானத்தை காத்தவர் ரஜினிதானே..

இவர் யாரை குத்தலாக பேசினாரோ, அதே ரஜினியை அதே மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி ஸ்டாலின் கவுரவித்தாரே..அது தன்மானத்திற்கு கிடைத்த அங்கீகாரம்தானே.

ஒருவேளை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த விழாவை கலைஞர் நடத்தியிருந்தால், காமராஜரை நிச்சயம் அழைத்து இருப்பார். அவரும் கலந்து கொண்டு பார்வையாளர்கள் வரிசையில் தான் அமர்ந்து இருப்பார்.

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியலை முன்னெடுக்கும் ரஜினி, அழைப்புக்கு மதிப்பு கொடுத்து கலந்து கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை அறியாதவரும் இல்லை.

தனக்கும் புரியாமல் கேட்பவர்களுக்கும் புரியாமல் பேசுபவர்களை விட, பேசாமல் அமைதியாக இருப்பது சிறந்தது என்பதையும் இந்த விழா எடுத்துக் காட்டியுள்ளது.

கிடைத்த மேடையில் எல்லாம் ஏறி வீராவேசமாக சபதம் போடுவதற்கு ரஜினி என்ன கட்சிப் பேச்சாளரா? கோடிக்கணக்கானோரின் தலைவா அல்லவா!

– ‘ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!