Rajini is awarding loyal fans

உண்மை உழைப்பு உயர்வு… ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் சொல்லும் சேதி!

சென்னை : ரஜினி மக்கள் மன்றம் அறிவித்த ஒரு மாத காலத்திற்குள் வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி என மூன்று மாவட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமை மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் நேரடியாக மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ரசிகர்களை அழைத்துப் பேசி , ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் அறிவித்துள்ளதாக கூறியுள்ளார். மூன்று மாவட்ட நிர்வாகிகளைப் பற்றி தெரிந்து கொண்ட பல தகவல்கள் ரஜினி கட்சியின்
‘உண்மை உழைப்பு உயர்வு’ கொள்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தீவிர ரஜினி ரசிகர். ரஜினியின் நேரடி வழிகாட்டுதலில் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியவர். மாவட்ட அளவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருபவர். ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரப்பூர்வமான முதல் நிர்வாகி என்ற பெயர் பெற்றுள்ளார். அவருடன் நியமிக்கப்பட்டுள்ள மற்ற நிர்வாகிகளும், நீண்ட நாட்களாக மன்றப் பணியாற்றி வருபவர்கள் தான். ரவியுடன் இணைந்து செயல்பட்டு வருபவர்கள்.

நெல்லை

நெல்லையைப் பொறுத்தவரை ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளராக இருந்த பானுசேகர் மிகவும் மூத்த ரசிகர். நெல்லையில் ரஜினி புகழை பரப்பிய முன்னோடி. நெல்லை தியேட்டர்களில் ரஜினியின் படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. சற்று உடல்நலம் குறைவாக இருப்பதால், இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன் என்று தலைமையிடம் கேட்டுள்ளார் பானுசேகர். அவருடைய கருத்தைக் கேட்டுக் கொண்ட தலைமை, ஆனாலும் கௌரவ செயலாளராக இருந்து மாவட்ட மன்றத்தை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

பானுசேகருக்காக சிறப்புப் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் செல்வக்குமாரும் நீண்ட நாட்களாக பானுசேகருடன் இணைந்து நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகியாக செயல்பட்டு வருபவர்தான். ஏனைய நிர்வாகிகளான தாயப்பன், கார்த்திகேயன், பாலகிருஷ்ணன், பகவதி ராஜன் உள்ளிட்டவர்களும் ரஜினியின் நீண்டநாள் தீவிர ரஜினி ரசிகர்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏஜே ஸ்டாலின், சாதாரண குடும்பத்தை சார்ந்த மிகத் தீவிர ரசிகர். ரஜினிக்காக கத்திக்குத்து வாங்கிய . தம்பிக்கு எந்த ஊரு படம் வெளியான போது, ரஜினி- கமல் ரசிகர்களுக்கான போட்டியில், எதிரணியைச் சார்ந்தவர் ஸ்டாலினை கத்தியால் குத்திவிட்டார். தகவல் அறிந்த ரஜினி உடனடியாக ஸ்டாலினை சென்னை அழைத்தார். காயத்துக்கு கட்டுப் போட்ட கையுடன் ரஜினியை சந்தித்தார் ஸ்டாலின். அது தொடர்ந்து, ரஜினியின் நேரடி வழிகாட்டுதலில் தொழிலில் ஈடுபட்டு வெகுவாக முன்னேறியவர்

வெளியூரில் தொழில் செய்ய நேர்ந்தாலும், மன்ற நிர்வாகிகளின் துணையுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தை சிறப்பாக வழி நடத்தித் சென்றவர் ஸ்டாலின். அவருடன் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளான விஜய் ஆனந்த், கந்த சிவசுப்பு, அருண் ஆனந்த், ஜெயக்கொடி உள்ளிட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றங்களின் முக்கிய தூண்களாக செயல்பட்டு வந்தவர்கள்.

இது வரையிலும் நியமிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களின் நிர்வாகிகளைப் பற்றி உற்று நோக்கும் போது ஒன்று தெளிவாகிறது. இவர்கள் அனைவருமே ரஜினி ரசிகர் மன்றத்தில் உண்மையாக உழைத்தவர்கள். அதற்குக் கிடைத்த பரிசு தான் இந்த பதவி உயர்வு எனத் தெரிய வருகிறது.

‘உண்மை உழைப்பு உயர்வு’ என்ற தத்துவத்தை தனது கட்சியிலிருந்தே செயல்படுத்த தொடங்கியுள்ளார் ரஜினிகாந்த்.

– ‘ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!