Rajini invited for PRO Union festival

சினிமா பி.ஆர்.ஓ.யூனியனின் முப்பெரும் விழா… ரஜினிக்கு அழைப்பு

சென்னை : திரைப்படத்தின் வெற்றிக்கு பின்புலமாக செயல்படும் மக்கள் தொடர்பாளர்கள் யூனியன் முப்பெரும் விழா எடுக்கிறார்கள். ஜனவரி மாதம் 3 ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அனைத்து திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறார்கள். பி.ஆர்.ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு தலைமையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அனைத்து உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

சினிமாத்துறையின் அனைத்து துறையினரையும் ஊக்கப்படுத்துபவர் ரஜினிகாந்த். சமீபத்தில் நடந்த ஸ்டண்ட் யூனியன் விழாவில் ரஜினியின் பேச்சும் பாராட்டும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் தலைமையில் தொடங்கப்பட்ட பி.ஆர்.ஓ யூனியன் விழாவுக்கும் நேரில் ரஜினி கலந்து கொண்டு சிறப்பிப்பார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

டிசம்பர் 31ம் தேதி அரசியல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே இந்த விழாவும் நடைபெற உள்ளதால், அவரது வருகை முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!