Rajini fans meet 5th day

உணர்சிவசப்பட்ட ரஜினி.. கலங்கி விட்ட ரசிகர்கள்!

சென்னை : ரசிகர் சந்திப்பின் ஐந்தாம் நாளான சனிக்கிழமை, ரஜினியின் உணர்ச்சிகரமான பேச்சு, அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டது. கட்டுப்படுத்த முடியாத ரஜினியின் கண்களில் கண்ணீர் கசிந்து விட்டது.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் “நீங்கள் நடிக்கவும் வேண்டாம், அரசியலுக்கும் வரவேண்டாம். ஆனால் உயிரோடு வந்தால் போதும்” என்று ரசிகர் ஒருவர் அனுப்பியிருந்த கடிதம் எழுதியிருந்தது தன்னை கண்கலங்க வைத்து விட்டதாக ரஜினி கூறினார்.

என்னை விட்டுப் போன உயிரை மீட்டுக் கொண்டு வந்தது நீங்கள் தான், உங்கள் அன்பு தான் என உருகி விட்டார். என்னை மீண்டும் உயிர்த்தெழ வைத்த ரசிகர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கலங்கி விட்டார்.

முன்னதாக தனது திரைப்பட வாழ்க்கையின் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் “ 1960களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாக பேசிக்கொள்வார்கள்.1973ல் முதன் முறையாக நான் சென்னை வந்தேன். எனக்குள் இருந்த நடிப்பு திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தவர் எனது நண்பன் ராஜ்பகதூர்.

சென்னையில் பாலச்சந்தரை முதலில் சந்தித்த போது, நடித்துக் காட்டச் சொன்னார். திட்டப்போகிறார் என்று தான் நினைத்தேன். ஆனால் மூன்று ப்டங்களில் புக் செய்கிறேன் என்று அதிர்ச்சியூட்டினார். ஒன்று மட்டும் செய்ய வேண்டும். தமிழ் மட்டும் கற்றுக்கொள். உன்னை எங்கு கொண்டு உட்கார வைக்கப்போகிறேன் பார் என்று சொன்னார். என்னை குழந்தைபோன்று பார்த்து கொண்டார்.

அதன்பின் பஞ்சு அருணாச்சலம், வாசு முத்துராமன், ராஜசேகர் ஆகியோர் என்னை ஸ்டார் ஆக்கினார்கள். சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள்” என்றார். ரஜினி மிகவும் தன்னடக்கத்துடன் இப்படிச் சொன்னாலும், 80 களிலேயே அவர் உச்சம் தொட்ட சூப்பர் ஸ்டார் தான்.

இந்தியா முழுவதும் தெரியும் அளவிற்கு 2.0 மூலம் என்னை உயர்த்தினார் ஷங்கர். இனிமேல் 2.0 போன்று படம் வருமா என்பது சந்தேகம். அந்தளவிற்கு படத்தில் கண்டென்ட் உள்ளது. படத்தில் சில தொழில்நுட்ப வேளைகள் இருப்பதால் ஏப்ரல் 14-க்கு ரீலிஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
காலாவில் ரஞ்சித் என்னை சிறப்பாக காட்டியுள்ளார். அந்த கேரக்டர் எனக்கே ரொம்ப பிடித்திருந்தது. 2.0 படம் வெளியாகிய இரண்டு மாதத்திற்குப் பிறகு காலா வெளி வரும் என்றும் சொன்னார்.

ஷங்கர் தான் தன்னை இந்தியா முழுவதும் தெரியச் செய்தார் என்பது ரஜினியின் பெருந்தன்மை. சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கான அந்தாகானூன் படத்தில் அமிதாப் பச்சனுடன் இந்தியில் அறிமுகமானர். டெல்லியில் ஓர் ஆண்டு ஓடியது. மூன்று முகம் படத்தின் இந்திப் பதிப்பான ஜான் ஜானி ஜனார்தன் சென்னையிலும் நூறு நாட்கள் கடந்து ஓடியது. இந்தியில் மூன்று வேடங்களில் வெளி வந்து வெற்றி பெற்ற முதல் படமும் அது தான். தமிழில் தவற விட்ட மலையூர் மம்பட்டியான் படத்தை கங்குவா என்று இந்தியில் நடித்தார். ராஜசேகரும் ரஜினியும் இணைந்த முதல் படம் அது தான். இன்னும் பல இந்திப்படங்களில் தனியாகவும், அமீர்கான், தர்மேந்திரா, வினோத் கன்னா, சன்னி தியோல், ஷாருக் கான், சத்ருகன் சின்ஹா,ஜாக்கி ஷராஃப் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்தும் பல வெற்றி படங்களை தந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

முத்தாய்ப்பாக ரசிகர்களுக்கு கனவு பற்றி அருமையான விளக்கம் கொடுத்தார். கனவில் இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது. அதற்காக கனவு காணக்கூடாது என்றில்லை. கனவு காண வேண்டும். அதனை நியாயமான முறையில் அடைய வேண்டும்.. நீ தனியாக இருக்கும்போது உன்னையே நீ மதிக்கணும். உடம்புக்கு எப்படியோ மெடிசன் தேவையோ அதனைபோல மனதிற்கு மெடிட்டேசன் முக்கியம்” என ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டினார் ரஜினி.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!