கமல் ஹாசனுக்கு வக்கீலாக ஆஜராகும் நடிகர் பார்த்திபனுக்கு ரஜினி ரசிகரின் கேள்வி! - VanakamIndia

கமல் ஹாசனுக்கு வக்கீலாக ஆஜராகும் நடிகர் பார்த்திபனுக்கு ரஜினி ரசிகரின் கேள்வி!

அரசியலுக்கு வரேன்னு சமூகவலைதளங்களில் சொல்வதும், மேடையில் கவர்ச்சிகரமாக முழங்கிவிட்டு கைதட்டல் வாங்குவதும்தான் அரசியல் வீரம்னு நெனச்சிட்டார் நடிகர் பார்த்திபன்.

ஏனுங்க பார்த்திபன் சார், அரசியலுக்கு வருவாரானு கமல்ஹாசன்கிட்ட நேரவே கேட்டுடலாம்னு சொன்னீங்க சரி, நேரடி பதில் வந்துச்சா? வராது, வந்தாலும் உங்களுக்குப் புரியாது.

தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் ரங்கராஜ் பாண்டே, அரசியலுக்கு வர்றீங்களான்னு கமல்ஹாசனை நேரடியாக கேட்டாரே. அதுக்கு அவர் சொன்ன பதில் உங்களுக்கு மட்டும் வெளங்குனுச்சு போல! வெளங்கியிருந்தா, கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?
இல்ல வந்துட்டாரா? இல்ல வந்துக்கிட்டே இருக்காரா? இல்ல வர வழில விஜய் டிவி பிக்பாஸ் செட்டுல உட்கார்ந்து ஓய்வெடுக்கிறாரா?
சொல்லுங்க பார்ப்போம்.

கமல்ஹாசன் பிக்பாசுக்கு கொடுத்த விளம்பரம், மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒட்டுமொத்த வெறுப்புக்கு ஆளானதை மறைக்கவே தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதளங்களில் அவர் அரசியல் பேசினார் என்பது உங்களைப் போன்ற அறிவாளிகளுக்குத் தெரியாதென்றாலும், வழிப்போக்கர்கள் நாங்கள் நன்றாகவே அறிவோம்.

ரங்கராஜ் பாண்டேவுக்கு கமல்ஹாசன் சொன்ன பதில் உங்களுக்குப் புரிஞ்சதா சொல்லுங்க.. வெறுமனே பேசிக்கொண்டே அரசியலில் இருப்பதுபோல் காட்டிக்கொள்வதை அவர் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் செய்யவில்லை. கமல்ஹாசன் நேரடியாகச் செய்வதைச் சொல்வாரென்றால் சினிமாவுக்காக அவர் சொன்னபடி ஏன் நாட்டைவிட்டு இன்னும் ஓடவில்லை?

ரஜினி அரசியலுக்கு வருவாரானு நீங்க ஆண்டவரிடம்தான் கேட்கவேண்டும்னு நக்கலடிக்கிறீங்க, இருக்கட்டும். கடவுளையே நக்கலடிக்கிற கூட்டம் இருக்கும்போது ரஜினி எம்மாத்திரம்.

1996 சட்டமன்ற தேர்தல், தமிழ்மாநில காங்கிரஸ் உருவாக்கம் என்ற அரசியல் வரலாறு ரஜினிக்கு எப்போதும் உண்டு. வெறுமனே தன் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைஞ்சல் செய்த காரணத்துக்காக அரசியல் பேசியவர் அல்ல ரஜினி.

அப்படியெல்லாம் ரஜினி கோவப்பட்டு அரசியல் செய்ய நினைத்திருந்தால் பாபா படத்திற்கு பாமக செய்த இடைஞ்சலுக்கு, அன்றே கட்சி ஆரம்பித்திருப்பார். கடவுள் நம்பிக்கையாளர் ரஜினி ஆண்டவன் கட்டளைக்கு காத்திருக்கத்தான் செய்வார். அவர் சொல்லும் ஆண்டவன் வேறு யாருமில்லை அவரது ஆழ்மனதுதான் அது.

ஒரு ஆன்மீகவாதிக்கு ஆழ்மனதின் செயல் நன்றாகவே தெரியும்.
அவர் கமல்ஹாசன் போல நாத்திகர் இல்லையே. உங்கள் பேட்டியின்போது உங்கள் அருகில் உட்கார்ந்து சிரித்த ஸ்டாலின் மகனிடம் கேட்டிருக்கலாமே, 1996ல் உங்கள் தாத்தாவும் அப்பாவும் ரஜினியின் ஆதரவைப் பெற எந்த ஆண்டவரிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்கினார்களென்று. கேட்கலையா?

‘பார்த்திபன், நான் மக்கள் மனசுல பதிய பல படங்கள்ல நடிச்சு உழைக்கவேண்டியிருந்தது. ஆனா நீங்க புதியபாதைங்கிற ஒரே படத்துல அத செஞ்சீங்க’னு ரஜினி பாராட்டுனதா சில வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் உங்கள் முன்னாள் குடும்பத்துடன் கொடுத்த பேட்டியை நான் படித்த ஞாபகம் இருக்கிறது.

இப்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கமல்ஹாசன் உங்களைப் பாராட்டி பேசியதாக எங்களுக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை உங்களுக்கு இருக்கலாம்.

என்ன பட ப்ரமோசன் அது. ‘பொதுவாக எம்மனசு தங்கம்..’ தானே!

ஏன் கமல்ஹாசன் படத்துல தலைப்பு எதுவும் கிடைக்கலையா. இதுக்குப் பேரு என்ன தெரியுமா.. சரி விடுங்க.

– கார்த்திக் MK

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!