ரஜினி பிறந்தநாள் : கோதண்டராமர் ஆலயத்தில் அன்னதானமும் சிறப்பு பூஜையும். - VanakamIndia

ரஜினி பிறந்தநாள் : கோதண்டராமர் ஆலயத்தில் அன்னதானமும் சிறப்பு பூஜையும்.

சென்னை : ரஜினிகாந்த் பிறந்தநாளை யொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் ரசிகர்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நந்தம்பாக்கம் கோதண்டராமர் ஸ்வாமி திருக்கோயிலில் நந்தம்பாக்கம் S.சண்முக பாண்டியன் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

”ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமிகளின் நல் ஆசியுடன், சூப்பர் ஸ்டார், தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும், அவர் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டியும், மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று தமிழக முதலமைச்சர் ஆகி மக்களுக்கு சேவை ஆற்றிட வேண்டியும்” சிறப்பு வழிபாடு செய்ததாக சண்முக பாண்டியன் கூறினார்.

ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பூஜை கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

நந்தம்பாக்கம் S.சண்முக பாண்டியன், பட்ரோடு B.பீட்டர் ரஜினி ராஜ், ஆலந்தூர் A.நெல்சன், உள்ளகரம் P.C.பாபு, நந்தம்பாக்கம் துரை சீனிவாசன், நந்தம்பாக்கம் M.தினேஷ் குமார், ஆட்டோ ரஜினி ராஜா, ஆலந்தூர் ரஜினி தினேஷ், நன்மை அறக்கட்டளை தமிழ்வாணன், சங்கர், கருங்கூழி சீனிவாசன், மற்றும் S.ரஜினி ஸ்ரீராகவேந்திர முரளி கலந்து கொண்டார்கள் .

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!