ரஜினி பிறந்தநாள்: மதுரையில் 100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை... மதுரை மாவட்ட மன்றம் ஏற்பாடு.. - VanakamIndia

ரஜினி பிறந்தநாள்: மதுரையில் 100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை… மதுரை மாவட்ட மன்றம் ஏற்பாடு..

மதுரை: மதுரை மாவட்ட ரஜினி மன்றமும், வாசன் ஐ கேரும்
இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மூலம்
100 பேருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

டிசம்பர் 2ம் தேதி சனிக்கிழமை, மதுரை மகபூப்பாளையத்தில் ஒய்எம்சிஏ ஊனமுற்றோர் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதில் மொத்தம் 350 கலந்து கொண்டார்கள். தேவைப்பட்டவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டார்கள். பங்கேற்றவர்களில் 100 பேர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப் படுகிறது. அவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 4ம் தேதி, திங்கட்கிழமை இலவச கண் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

வாசன் ஐ கேர் நிறுவனத்தின் சிறப்பு சலுகைக்குப் பிறகும், ஒரு நபருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பதினைந்து ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. நூறு பேருக்கு அறுவை சிகிச்சைக்கு மட்டும், 15 லட்ச ரூபாய் மதுரை மாவட்ட ரஜினி மன்றம் ஏற்பாடு செய்துள்ளார்கள். தவிர கண் முகாமுக்கும் சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவானதாகத் தெரிகிறது.

கண் சிகிச்சை முகாமுக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற வன்னி மரத்தடி விநாயகர் கோயிலில் ரஜினிக்காக சிறப்பு அர்ச்சனையும், அபிஷேகமும் நடைபெற்றது.

மதுரை மாவட்ட பொறுப்பாளர் ஜாபர், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாலநமச்சிவாயம், மதுரை மாவட்ட நிர்வாகிகள் P.அழகர், தளபதி N.பால்பாண்டி N.ரஜினி மாரி, அவனி A.ரஜினி பாலா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு கண்ணாடி வழங்கி, ரஜினியின் நலம்வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி பிராத்தனை செய்ய உள்ளார்கள்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!