ரஜினி பிறந்தநாள்: மதுரவாயலில் கண் சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம் - VanakamIndia

ரஜினி பிறந்தநாள்: மதுரவாயலில் கண் சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம்

மதுரவாயல்: ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் நலத்திட்டப் பணிகள் செய்து வருகிறார்கள். தெற்கே, மதுரையில் 100 பேருக்கு இலவட கண் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடக்கே ,சென்னைக்கு அருகே மதுரவாயல் தலைமை ரஜினி மன்றமும் வாசன் ஐ கேர் நிறுவனமும் இணைந்து கண் சிகிச்சை முகாம் நடத்தினார்கள். அவர்களுடன் மாற்றம் ரத்ததான இயக்கமும் இணைந்து நடத்திய ரத்த தான முகாமும் நடைபெற்றது.

ரஜினி ரசிகர்கள் 91 நபர்கள் ரத்த தானம் செய்யதுள்ளார்கள்.
ஒவ்வொரு ரசிகரும் 350 மி.லி. வீதம் ரத்தம் கொடுத்துள்ளார்கள்.

கண் சிகிச்சை முகாமில் 150க்கும் மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு பரிசோதனை செய்து, குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சிகிச்சை தேவைப்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக மருந்து, மாத்திரை மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார்கள். வாசன் ஐ கேர் நிறுவனம் கட்டணம் ஏதும் இல்லாமல் இந்த முகாமில் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார்கள்.

சென்னை மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் சூர்யா முகாமை தொடங்கி வைத்தார். மதுரவாயல் மன்ற தலைவர், R.ரஜினி கண்ணன், போரூர் ஜான் தலைமை தாங்கினார்கள். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, ரமேஷ்குமார், சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றார்கள்

கே.கே நகர் சாதிக் பாட்சா, R.லட்சுமணன், MKS. முருகன், அரும்பாக்கம் தாமஸ், செனாய்நகர் ஸ்ரீகாந்த், நந்தம்பாக்கம் சண்முகபாண்டியன், மயிலை வெங்கட், மயிலை ஆனந்த், பாலாஜி, திண்டுக்கல் சரவணன், ரஜினி கிருஷ்ணன், ராமாபுரம் M. வேலன், நுங்கை ஸ்ரீதர், தேனா முஸ்தபா,
காலா ஆரூண், மார்தாண்டன், JK ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!