பாஜக நாட்டைப் பிளவுபடுத்துகிறது... காங்கிரஸ் அன்பால் இணைக்கிறது! - ராகுல் காந்தி - VanakamIndia

பாஜக நாட்டைப் பிளவுபடுத்துகிறது… காங்கிரஸ் அன்பால் இணைக்கிறது! – ராகுல் காந்தி

டெல்லி: பாஜக அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டை முன்னேற்றியது. பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது. ஆனால் காங்கிரஸ்தான் அன்பால் இணைக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக 47 வயது ராகுல் காந்தி பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். நேரு குடும்பத்திலிருந்து வரும் 6வது காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்றதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

பின்னர் ராகுல் காந்தி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். தன்னை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்றும் நாடு வறுமையாக இருப்பதற்கான நிலையை மாற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், “13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்ததேன். காங்கிரஸ் கட்சி விளிம்புநிலை மக்களுக்காக போராடி வருகிறது. வெறுப்பை நாங்கள் வெறுப்பால் எதிர்கொள்வதல்ல. அன்பினால் எதிர்கொள்கிறோம்.

பாஜக அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டை முன்னேற்றியது. பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது. பழமைவாதி கட்சியாக இருக்கிறது. நாங்கள் முன்னேற்றுகிறோம். மக்களின் குரலை அவர்கள் நசுக்கிறார்கள். நாங்கள் மக்களை உக்கப்படுத்துகிறோம்.

கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பாஜகவினரை நாங்கள் சகோதரர்களாகவே பார்க்கிறோம். நாடு முழுவதும் ஒருவரின் குரல் மட்டுமே ஒலிக்கிறது. என்ன சாப்பிடவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மக்கள் கொலை செய்யப்படுகின்றனர்,” என்றார் ராகுல்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!