Putin to contest Russian Presidential election again

ரஷ்ய அதிபர் தேர்தல்… மீண்டும் போட்டியிடும் புடின்!



மாஸ்கோ:
ரஷியா நாட்டின் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் விளாடிமிர் புடின்.

ரஷ்ய பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புடின் (65) கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது ஆறாண்டு பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

வோல்கா நகரத்தில் உள்ள பிரபல கார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் 6-12-2017 அன்று உரையாற்றியபோது தனது விருப்பத்தை அவர் வெளியிட்டார்.

இந்நிலையில், மாஸ்கோ நகரில் உள்ள மத்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் விளாடிமிர் புடின் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்நாட்டு தேர்தல் சட்டங்களின்படி தனது பாஸ்போர்ட்டுடன் தனது வேட்பு மனுவை ஆதரிக்கும் 3 லட்சம் வாக்களர்களின் கையொப்ப படிவத்தையும் அவர் தேர்தல் அதிகாரியிடம் அளித்தார்.

முன்னதாக, இரண்டாவது முறை அதிபர் தேர்தலில் புடினை களமிறக்க தீர்மானித்த அந்நாட்டின் அறுநூறுக்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் விளையாட்டு துறை பிரபலங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிடும் ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தன. கிரெம்ளின் மாளிகையில் உள்ள பணிச்சுமையால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என புடின் தெரிவித்து விட்டார்.

எதிர்வரும் தேர்தலில் அவர் வெற்றிபெற்று அதிபரானால் வரும் 2024-ம் ஆண்டுவரை நீடிக்கும்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!