பிரபல இளம் நடிகை மர்ம மரணம்... தற்கொலையா? - VanakamIndia

பிரபல இளம் நடிகை மர்ம மரணம்… தற்கொலையா?

sabarna

சென்னை: பிரபல இளம் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன்டிவியில் சீரியல்களில் நடித்தவர் சபர்ணா. சொந்த பந்தம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்த சபர்ணாவிற்கு சினிமா வாய்ப்புகள் வரவே சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார்.

தனுஷ் நடித்த படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை, பூஜை உள்பட பல திரைப்படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார்.

நடிக்கும் போது காதலில் விழுந்த அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக அவரே ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார். பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியிருந்தார் சபர்ணா. இந்த நிலையில் மதுராவயலில் தான் வசித்த வீட்டில் சபர்ணா இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மூன்று தினங்களாக அவரது வீடு திறக்கப்படவில்லையாம். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் தர, போலீசார் வந்த பிறகு வீடு திறக்கப்பட்டது. அப்போது சடலமாகக் காணப்பட்டார் சபர்ணா.

அவரது தற்கொலைக்காண காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சபர்ணாவின் சொந்த ஊர் கோவை. அவருக்கு வயது 24.

Television & Cinema actress Sabarna, 24, was found dead at her residence on Friday evening.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!