Pongal Release Movies

பொங்கல் ரேஸில் எத்தனைப் படங்கள் ? யார் யாருக்கிடையே போட்டி!

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை, திங்கள் , செவ்வாய் அரசு விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாகும்.

தமிழ் சினிமாவுக்கு இப்படி தொடர் விடுமுறை நாட்கள் பெரும் வரப்பிரசாதமாக அமையும். பொங்கல், காணும் பொங்கல் என தியேட்டரில் அலைமோதும் நேரம்.

இந்த பொங்கலுக்கு முதலில் 9 படங்கள் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதில் இரும்புத்திரை, கலகலப்பு – 2, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் போன்ற படங்கள் வெளியேறிவிட்டன. ஜனவரி 26 ஆம் தேதியை குறி வைத்துள்ளன.

மீதமுள்ள ஆறு படங்களில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், குலேபகாவலி, மதுரவீரன் ஆகிய படங்கள் சென்சார் செய்யப்பட்டு விட்டன. தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மற்றும் மன்னர் வகையறா படங்கள் சென்சாருக்கு விண்ணப்பித்து விட்டு, சென்சார் அதிகாரிகளின் பார்வைக்காக காத்திருக்கின்றன.

சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகன் மாற்றப்பட்டு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டு, புத்தாண்டு அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதே வேளையில் பழைய அதிகாரி மதியழகனுக்கான மாறுதல் ஆணை வராத காரணத்தால், அவரும் பணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். எனவே மேற்கொண்ட மூன்று படங்களையும் யார் பார்வையிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த பஞ்சாயத்து தீர்ந்த பின்னர் வரிசைப்படி தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மன்னர் வகையறா படங்களை அதிகாரிகள் பார்வையிடுவார்கள்.

பொங்கல் வெளியீட்டிற்கு கடும் போட்டி நிலவுவதால் “மன்னர் வகையறா ” படத்தை எந்த வித டெபாசிட்டும் இல்லாமலும், திரையரங்கிற்கு கூடுதல் கமிஷன் கிடைக்க வழிவகுக்கும் வகையிலும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய ஆலோசித்துள்ளார்கள். இதனால் தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், படத்திற்கு இணையாக ” மன்னர் வகையறா ” படத்திற்கும் கூடுதல் திரையரங்குகள் கிடைக்க உள்ளது.

பொங்கல் ரேசில் முந்தப் போவது யார் சூர்யாவா? விக்ரமா? அல்லது விமலுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கிடைக்குமா?. ஒரு வாரத்திற்குள் விடை தெரிந்து விடும்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!