அக்ரஹாரத்தில் குசுகுசு! - VanakamIndia

அக்ரஹாரத்தில் குசுகுசு!

வாப்பா. எப்டி இருக்க?

நல்லாருக்கேன் சித்தி. நீங்கதா ரொம்ப எளச்சுப் போயி..

போதும்டா, உங்க பச்சாதாபம். ரொம்பதான் ஃபீலிங்கு. இங்க என்ன கொறச்சல் எனக்கு. கள நிலவரம் சொல்லு.

ரெண்டு மாசம் வாய மூடிகிட்டு கம்னு இருக்க சொன்னீங்களா..?

ஆமா..

அத அப்டியே மீடியாவுக்கு சொல்லிட்டேன்.

அப்றம்?

நீங்க சொன்ன மாதிரியே அவருக்கு குடைச்சல் குடுத்தேன்.

எப்டீ?

கவர்மெண்ட நீங்க பாத்துக்குங்க. கச்சிய ஏங்கிட்ட விட்ரணும். தலைவர் விழாவ ஏந்தலைமைல கொண்டாடணும்.னு சொல்லி அனுப்னேன்.

டென்சன் ஆனாரா?

ஆகாமலா பின்ன.

மீடியால வந்துதா?

வராமலா பின்ன.

வேறென்ன செஞ்ச?

நம்மகிட்ட 25 பேரு இருக்றதா கிளப்பி விட்டேன்.

அப்பால?

அது யார்றா 25னு மண்டய எண்ண ஆரமிச்சாய்ங்க.

அப்றகு?

ஆறு பேர அனுப்பி தலைமை கழக கேட் சாவிய கேட்டேன்.

குடுத்தாங்களா?

குடுத்ருவாங்களாக்கும். வேலய பாருங்க. முடிஞ்சா ஏறி குதிச்சு உள்ற போகச் சொல்லுனுட்டாராம்.

தேறிட்டார் போலய. டெல்லிக்காரன் அங்கயும் ஆர்லிக்ஸ் குடுக்காம்னு இப்ப தெரியுதா..?

ஆமா சித்தி. ஆனா நமக்கும் பூஸ்ட் குடுத்துகிட்டுதான் இருக்காங்க.

அது எனக்கு தெரியுந் தம்பி. வெங்காயத்த இங்கிட்டு கேம்ப் அடிச்சு தங்க வச்சிருக்றதே அதுக்குதான. சபை மேட்டர்லாம் எப்டி போய்கிட்டு இருக்கு?

தல நாம சொன்னபடி நடக்கு. காலைல ஆரமிச்சதுமே அவங்க எது பேசினாலும் கோர்ட்ல இருக்க மேட்டர பத்தி பேசக்கூடாதுனு தடுக்குது. அவய்ங்க டென்சனாகி கத்துன உடனே காவலர்களுக்கு ஆடர் போட்ருது.

குண்டுகட்டுதான..? சிரிக்காம சொல்லு.

இப்ப அதுக்கு அவசியமே இல்ல சித்தி. யப்பா, குறுக்கு புடிச்சுக்குது. கேஸ் ப்ராப்லம் ஜாஸ்தியா இருக்கு. அங்க இங்க நீங்க கைய வச்சா பார்ட்ஸ் கழண்ட்ரும்போல இருக்கு. நாங்களாவே போய்ட்றோம்னு கெளம்பிர்றாங்க.

ரோட்ல உக்காந்துகிட்டு பேட்டில்லாம் குடுப்பாங்களே?

ரெண்டு நாளு குடுத்தாங்க சித்தி. போரடிக்குதுனு ஜனங்க சேனல் மாத்றதா சொல்லி டீவிகாரங்க ஒதுங்கிட்டாங்க. அதனால அது ஸ்டாப்பாயிர்ச்சு.

குங்குமப் பொட்டு எப்டி இருக்காரு?

டெல்லில இருந்து காம்ப்ளான் வராம கொஞ்சம் வீக்கான மாதிரி தெரியுது சித்தி. என்னமோ இயற்கை வைத்தியம் பண்ணிக்றதுக்கு போய்ட்டு போய்ட்டு வர்றாரு.

அதெல்லாம் மீடியாவுக்கு தெரியுமா?

நம்மாளுகள எல்லா பக்கமும் அலர்ட் பண்ணிட்டேன்ல. உடனுக்குடன் மீடியாக்கு வாட்சப் போட்ருவானுங்க. ஒண்ணு மிஸ் ஆவுறதில்ல.

அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்கப்பா. முடிஞ்சா அந்த கிண்டி பங்களா பெரியவர் கூடவும் எதுனா வம்பு இழுக்க ஏற்பாடு செய்ங்க. ஆளுங்கச்சியும் நாமதான் எதிர்க்கச்சியும் நாமதான்னு எஸ்டாப்லிஸ் பண்ணனும். அதான் முக்கியம். நல்லா குழப்பிகிட்டே இருங்க.

நல்லாவே செஞ்சுகிட்டு இருக்கோம் சித்தி. இப்பவே யாரும் கண்டுகலையேனு சேனாதானா டர்ராயிட்டாப்ல.

சபாஸ்டா தம்பி. வேற யாரு வந்துருக்கா?

தம்பி வந்துருக்காரு, சித்தி. வெளீல வெயிட்டிங்.

வரச் சொல்லு. டெல்லிக் காரங்களையும் கொழப்பம் தெளிய விட்ரக் கூடாது. நம்மகிட்ட கன்சல்ட் பண்ணாமலே வேட்பாளர அறிவிச்சுட்டு இப்ப ஆதரவு கேட்டு தூது அனுப்பிருப்பாங்க. நல்லா குடுத்து அனுப்புறேன். நீ பத்ரமா போயிட்டு வா தங்கம்.

வாரேன் சித்தி.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!