பிச்சைக்காரன் நாயகி சாட்னாவுக்கு ரகசிய திருமணம்.. தாயார் கடும் எதிர்ப்பு! - VanakamIndia

பிச்சைக்காரன் நாயகி சாட்னாவுக்கு ரகசிய திருமணம்.. தாயார் கடும் எதிர்ப்பு!

பிச்சைக்காரன் படத்தில் நாயகியாக நடித்த சாட்னா டைட்டஸுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது.

நடிகை சாட்னா டைட்டஸ், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். விஜய் ஆண்டனி நடித்து வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றவர்.

தமிழில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் படத்தைத் தமிழகம் முழுவது வெளியிட்டது கே.ஆர். பிலிம்ஸ். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கைதான் சாட்னா ரகசியத் திருமணம் செய்துகொண்டுள்ளாராம். இருவருடைய காதலுக்கு சாட்னாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இத்திருமணம் குறித்து கார்த்திக் கூறுகையில், “திருமணம் நடந்து ஒருமாதமாகிவிட்டது. முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளோம். திருமணத்துக்குப் பிறகு சாட்னா நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். விரைவில் ஊர் அறிய திருமணம் நடைபெறும்,” என்றார்.

இந்தத் திருமணத்தை தாங்கள் ஏற்கவில்லை என்றும், தன் மகளை மூளைச் சலவை செய்து திருமணம் செய்துள்ளார் கார்த்திக் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சாட்னாவின் தாயார்.

According to reports, Pichaikkaran heroine Satna Titus got married to KR Films Karthik secretely.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!