People identify TamilNadu by Rajini

வெளியூர், வெளிநாடுகள்ல தமிழ்நாடுன்னு சொன்னா, அது ரஜினி ஊருதான்!


ரஜினி அரசியலுக்கு வரேன்னு சொன்னாலும் சொன்னார், கடந்த நான்கு நாட்களாக தமிழகம், இந்தியா தாண்டி உலகம் முழுக்க அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவரின் ஒவ்வொரு வார்த்தைகளையும் வைத்து ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் புனேவில் வேலை செய்யும் ஒரு தமிழர் அவரின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறும்போது, “நான் புனேவில் வேலை செய்து வருகிறேன். எந்த நடிகரின் ரசிகரும் இல்லை. கடை வீதிக்கு போய் வரும்போது கடையில் இருந்தவர்கள் நான் தமிழில் பேசுவதை கவனித்து, தமிழ்நாட்டில் ரஜினியின் அரசியல் வருகையை பற்றி என்னிடம் ஆர்வமாக விசாரித்தார்கள். ரஜினி அரசியலுக்கு வராராமே? என அவர்கள் கேட்க ஆமாம் என்று மட்டும் சொன்னேன்.

அதன் பிறகு அவர்கள் பேசியவை நானே எதிர்பாராதவை. ரஜினி இன்னைக்கும் சினிமாவில் நம்பர் 1 நடிகர், அவர் அரசியலுக்கு வரார்னா நிச்சயம் நல்ல விஷயம் தான். அவர் பணத்துக்காக அரசியலுக்கு வர்றவர் கிடையாது, அப்படி பணம் நோக்கம்னா அவரோட சீனியர் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் மாதிரி விளம்பரங்களில் நடித்து பல கோடிகள் சம்பாதிச்சுட்டு போயிடலாம். அவர் விளம்பரத்தில நடிக்கிறேன்னு சொன்னா 100 கோடி கொடுக்கவும் தயாரா இருக்காங்க. அவர் அதையும் மீறி அரசியலுக்கு வர்றார்னா, மக்களுக்கு நல்லது செய்ற நோக்கத்துல தான் வருவாரு. வட இந்தியர்களுக்கு அவர் மீது மரியாதை அதிகம்னு சொன்னார்”.

அவர் கூறியதை பார்க்கும்போது தான் அவர்கள் ரஜினி மீது எவ்வளவு மரியாதை வச்சிருக்காங்கனு தெரியுது. ஆனா நம்ம ஊர்ல தான் அவர் தமிழர் இல்லை, மராத்தி, கன்னடர்னு ரொம்ப பிரிச்சி பேசிட்டுருக்காங்க.

உண்மையில் வெளியூர், வெளிநாடுகள்ல தமிழ்நாடுனு சொன்னா, அது ரஜினி ஊருனு தான் எல்லோரும் புரிஞ்சிக்கிறாங்க. தமிழின் அடையாளமாகவும் அவர் தான் இருக்காரு என்றார் நடுநிலையான அந்த புனே தமிழர்.

– செங்கோட்டையன்

Author: admin
Tags

Comments (1)

  1. jayaprakash says:

    yes yes yea yes yes yes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!