நாம் நம்முடைய உலகம் என்று நினைத்துக் கொண்டு இருப்பது ஒன்றும் அத்தனை பெரியது அல்ல! யோசித்துப் பாருங்கள்… வெறும் 2000 பேர்தான் நாம் நன்கு அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக அல்லது நம்மை தனிப்பட்டு நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்!!
இந்த 2000 பேரைத்தான் மொத்த உலகம் என்று நாம் போலியாக நம்பிக் கொண்டு இவர்களை மனதில் வைத்துத்தான் “பெருமை” என்கிறோம்.. “கர்வம்” என்கிறோம்..
“அசிங்கம்” என்கிறோம்… “அவமானம்” என்கிறோம்.. “உயர்வு” என்கிறோம்…”தாழ்வு” என்கிறோம்.. “கொலை” செய்கிறோம்.. “தற்கொலை” செய்கிறோம்… எல்லாக் கருமத்தையும் நினைக்கிறோம்.
ஆக உங்களை கவனித்துக் கொண்டு இருப்பது மிகப் பெரிய உலகம் என்று நீங்கள் நினைத்தாலும் அது வெறும் 2000 பேர்களை மட்டுமே உள்ளடக்கிய சின்னஞ் சிறிய உலகம் தான்.
இனி அதையும் தவிர்த்து விட்டு “நீங்கள்” என்ற ஒற்றை உலகிற்குள் வந்து அதற்காக மட்டுமே வாழத் துவங்குங்கள்..
வலிகள் இல்லை. வருத்தங்களும் இல்லை. ஒரே பிறப்பு! ஒரே வாழ்க்கை!!
– எம்.எம்.அப்துல்லா