தென் அமெரிக்காவுடன் வர்த்தக நெருக்கடி ஏற்படலாம்! - பெருவில் ஒபாமா - VanakamIndia

தென் அமெரிக்காவுடன் வர்த்தக நெருக்கடி ஏற்படலாம்! – பெருவில் ஒபாமா

obama-peru-2

லிமா (பெரு): அதிபர் ஒபாமாவின் கடைசி வெளி நாட்டுப் பயணம் பெருவில் நிறைவு பெறுகிறது. அமெரிக்கா முயற்சியில் இளம் தலைவர்கள் அமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் ஒபாமா உரையாற்றினார்.

அமெரிக்க அரசின் முக்கிய செயல் திட்டங்களை ட்ரம்பின் புதிய அரசாங்கம் எளிதில் மாற்ற முடியாது. அதே சமயத்தில் தென் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் நெருக்கடி சூழல் ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளார்.

அதற்காக யாரும் உடனடியாக பதட்டம் அடையத் தேவையில்லை. வர்த்தக உடன்பாட்டின் செயல்பாடுகளை புதிய அரசாங்கம் கவனிக்கும் போது, அமெரிக்காவுக்கும் – லத்தீன் அமெரிக்காவுக்கும் கிடைக்கும் பரஸ்பர நன்மைகளையும் பார்ப்பார்கள்.

அப்போது வர்த்தக உடன்பாடு தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தில் சமயங்களில் நாம் நினைப்பது போல் அனைத்தும் நடந்து விடுவதில்லை. ஏமாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். அதை நாம் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது.

தேர்தல் மட்டுமே ஜனநாயகம் கிடையாது. அதையும் கடந்தது. ஜனநாயகம் சில நேரங்களில் நம்மை வெறுப்படையச் செய்யலாம். சோர்வை உண்டாக்கலாம். நாம் நம்பியவை 100 சதவீதம் கூட நடக்காமல் போகலாம்.

ஜனநாயகத்துடன் சில சமரசங்கள் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று ஒபாமா பேசினார். ஹிலரியின் தோல்வியைத்தான் இவ்வாறு மறைமுகமாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.

obama-peru4

பெரு நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் அதிபர் ஒபாமாவின் அரசு முறைப் பயணங்கள் நிறைவடைகிறது.

ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு எந்த நாட்டுக்கு முதல் பயணம் மேற்கொள்வார் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது. அது ரஷ்யாவாகக் கூட இருக்கலாம்.

ட்ரம்பின் முதல் வெளி நாட்டுப் பயணத்திலேயே அவருடைய வெளியுறவுக் கொள்கையை உணர்ந்து கொள்ள முடியும்.

– தினகர்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!