மோடிக்கு கிடைத்த பங்காளி எழுத்தாளர்கள்? - VanakamIndia

மோடிக்கு கிடைத்த பங்காளி எழுத்தாளர்கள்?

புதிய இருள் என்று இடைத் தேர்தல் முடிவு குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார். மோடிக்கு வால் பிடிக்கிற எழுத்தாளர்களாகவே பலஎழுத்தாளர்களும் இருப்பது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமே. விழுந்த அடி மயிலாப்பூர் மாபியாவுக்கு. அதுக்கு வலிக்குதுன்னு கத்துறவன் பூராம் நம்ம எழுத்தாளர் கேங்கு. அந்த சாரு நிவேதிதா ஏதோ நாட்டை விட்டு போறேன்னு சொன்னாராம். போகச் சொல்லாதீங்க. அப்புறம் வெளிநாடு போக உங்ககிட்ட காசு வசூல் பண்ண அக்கவுண்ட் நம்பர் அனுப்புவார்.

இந்த கருப்பு பணம் ஒழியப் போகுதுன்னு சூசகமா மோடிக்கு ஆதரவு கொடுத்தவர் ஞாநி. எப்படி ஒளிந்து விளையாடி இவர்களால் முகமூடி அணிய முடிகிறது. இங்கே திராவிட கட்சிகளில் அழகிரி கூட அரசியல் அவசியம் என்று வந்தால் மேலே ஏறி வரத் தான் செய்வார். ஆனால் ஒரு வன்முறை கருத்தியலை மத துவேசத்தை மக்கள் வெறுப்பை வைத்துக் கொண்டு காந்தி முகமூடி அணிந்து கொண்டு மக்களை முட்டாளாக்க ஜெயமோகன் போன்ற ஆட்கள் வருவது சிரிப்பாக இருக்கிறது.

இந்த திராவிடக் கட்சிகள் இடதுமில்லை வலதுமில்லை. ஏன் கொள்கைகள் கூட பெரிதாக இல்லை. அவர்கள் துவங்கிய அன்று தமிழர்களுக்கு துவக்கக் கல்வியை அடுத்து பல்கலைக்கழகம் வேண்டும் என்று சாதித்தார்கள். தனியார் கல்லூரிகள் வந்தபோது கூட பிந்திவிடாமல் ஓடினார்கள். பல சறுக்கல்களுக்கு இடையில் அவர்கள் அளவிற்கு ஒரு மாநிலத்தை நாட்டை நடத்துவது போல கரிசனத்தோடு நடத்தும் கட்சிகளைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

அப்படிச் சொன்னால் தேசிய அளவில் காங்கிரஸ் மட்டுமே ஓரளவிற்கு இருந்திருக்கும். தொழிற்சாலை புரட்சிகளையே பார்க்காமல் மூன்று மாநிலங்களில் கம்யூனிஸ்டு ஆட்சி வந்ததாக பேசிக் கொள்கிறார்கள். அங்கே ஆண்டவர்கள் எல்லாம் படித்த பெரிய தலைகள் தான்.
தினகரன் வெற்றி பெற்றது மக்களின் தேர்வு. பணம் கொடுத்த விபரம் கூட சொல்ல முடியும். மதுசூதனன் தான் வெளிப்படையாக ஆறாயிரம்.

தினகரன் ஓட்டு கேட்க உடன் வரும் ஆர் கே நகர் வாசிகளுக்கு ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாயாம். சரி அவர்கள் உழைப்பு கூலி என்று கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மதுசூதனனை தில்லியின் துணை கொண்டு ஜெயிக்க வைக்க முயன்றார்களே. அதில் எல்லாம் இருள் இல்லாமல் ஒளி இருந்ததா?

சுரண்டல் அமைப்பின் உபரி தான் ஊழல். ஊழல் தான் வளர்ச்சி, வளர்ச்சி தான் வறுமையை ஒழிக்கும் என்று பார்முலா சொல்லிக் கொண்டு திரிந்தாரே ஜெயமோகன். என்னவாம்? ஆனால் ஒன்று சொல்கிறேன். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள். எதையும் படிக்க மாட்டார்கள். யார் கிட்ட போனாலும், நல்லா பேசுறீங்க. மூவாயிரம் ரூபாய் வச்சிக்கோங்க, என்று எல்லாப் பேச்சாளர்களுக்கும் கொடுக்கும் மரியாதையைத் தான் இவர்களுக்கும் கொடுப்பார்கள்.

மாற்று அல்லது ஊழலுக்கு எதிரான என்கிற நிலைப்பாடு எடுக்க, முதலில் மோடி என்கிற கொலைகாரருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க எழுதுங்கள் பார்ப்போம். உங்க யோக்கியதை எல்லாம் சந்தி சிரிக்கும். மோடி செய்கிற குற்றங்களில் இந்த எழுத்தாளர்கள் பங்காளிகள் என்பது தார்மீகமானது மட்டுமல்ல, உண்மை.

– இளங்கோ கல்லணை

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!