வட கொரியா: தொடரும் 'குழந்தசாமி'யின் அதிரடி ஏவுகணை சோதனை! - VanakamIndia

வட கொரியா: தொடரும் ‘குழந்தசாமி’யின் அதிரடி ஏவுகணை சோதனை!

வலிமை வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா தயாரித்து வருகிறது. பல நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இது ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பல வருடங்களாக வடகொரியாவும், தென் கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. வட கொரியா, தன் அணு ஆயுத பலத்தை நிரூபிக்கும் வகையில், பசிபிக் பெருங்கடலில், தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் வடகொரியா மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது.

ஐ.நா., மற்றும் உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்பையும் மீறி, வடகொரியாவின் இந்த தொடர் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!