North Korea declines talks with America

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு கெஞ்ச வில்லை… வட கொரியா திட்டவட்டம்!

சியோல்: தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் சென்றுள்ளார். வட கொரியாவின் சார்பில் அதிபர் கிம் ஜாங் உன்- ன் இளைய சகோதரி கிம் யோ ஜோங், வட கொரியாவின் மூத்த அதிகாரிகளுடன் இந்த ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

தென் கொரியாவுக்கு வட கொரியா அதிபரின் சகோதரியே நேரில் வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், தென் கொரியாவுக்கு செல்வதற்கு முன், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ‘ அடுத்தவர்களை துன்பப்படுத்த தனது வளத்தை துஷ்பிரயோகம் கொடூரமான நாடு வட கொரியா’ என்று குறிப்பிட்டிருந்தார்.

வட கொரியா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைக்கு ஏதும் ஏற்பாடுகள் செய்யவில்லை. ஆனாலும் தங்கள் தரப்பு சார்பில் , வட கொரியாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் என்றும் கூறியிருந்தார்.

வட கொரியா தரப்பு அதிகாரிகளோ, அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நாங்கள் ஒன்றும் கெஞ்சிக் கொண்டிருக்க வில்லை. எதிர்காலத்திலும் கெஞ்சப் போவதில்லை என்று கூறியுள்ளனர். மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதற்கு மட்டுமே வந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி மூலம் வட தென் கொரிய நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தைக்கு வழி ஏற்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அமெரிக்க துணை அதிபரின் குற்றச்சாட்டு, வட கொரியாவை உசுப்பேத்தி விட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை கடுமையாக்க வேண்டும் என்று நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!