'Nobody other than Nathuram Godse shot Mahatma Gandhi'

‘காந்தியைச் சுட்டது கோட்சே மட்டும்தான்… வேறு யாருமில்லை!’


டெல்லி: மகாத்மா காந்தியைச் சுட்டது கோட்சே மட்டும்தான். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கத் தேவையில்லை என உயர்நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சர்வான் தெரிவித்துள்ளார்.

‘காந்தியை கோட்சே மட்டும் சுடவில்லை. மர்ம நபர் சுட்ட போது பாய்ந்த நான்காவது தோட்டாதான் காந்தியின் உயிரை பறித்தது. எனவே மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சர்வான் என்பவரை நியமித்தது. அவர் இன்று தாக்கல் செய்த மனுவில், “காந்தியை கோட்சே மட்டும்தான் சுட்டுள்ளார்.. வேறு யாருமில்லை. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கத் தேவையில்லை, என கூறியுள்ளார். மேலும் அது தொடர்பாக ஏராளமான ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!