பட்ஜெட் 2017: வருமான வரி உச்சவரம்பு... பெரிய மாற்றம் ஏதுமில்லை! - VanakamIndia

பட்ஜெட் 2017: வருமான வரி உச்சவரம்பு… பெரிய மாற்றம் ஏதுமில்லை!


டெல்லி: ரூ 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 5 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 சதவீதம் வரி செலுத்தியோர், இனி 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

இன்று  2017-க்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.  அதில் வருமான வரி உச்ச வரம்பு குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. அதே ரூ 2.5 லட்சம்தான் உச்ச வரம்பு. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் அல்லது சம்பளம் பெறுவோருக்கு 10 சதவீதமாக இருந்த வரி, இப்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு ரூ 25 ஆயிரம் மற்றும் 20 சதவீத வரி (5 லட்சத்துக்கு மட்டும்).

10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் ரூ 1.25 லட்சம் மற்றும் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் (ரூ 10லட்சம் போக மீதி உள்ள வருவாய்க்கு).

இந்த மூன்று பிரிவினருமே வருமான வரியுடன் 2 சதவீத கல்வி வரி மற்றும் 1 சதவீத மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரி செலுத்த வேண்டும்.

தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!