கனடா அரசின் உயர் விருதினைப் பெற்ற தமிழ்ப் போலீஸ் அதிகாரி! - VanakamIndia

கனடா அரசின் உயர் விருதினைப் பெற்ற தமிழ்ப் போலீஸ் அதிகாரி!

டொரன்டோ: கனடா அரசின் ஆர்டர் ஆஃப் மெரிட் விருதினைப் பெற்றார் ஹால்டன் மண்டல தமிழ் போலீஸ் அதிகாரி நிசான் துரையப்பா.

இந்த விருதினைப் பெற்ற முதல் தென்னாசியர் என்ற பெருமையை நிசான் துரையப்பா பெறுவதோடு, கனடிய தமிழ்ச் சமுதாயத்தில் கனடிய அரசின் அதியுயர் விருதினைப் பெற்ற முதலாவது பிரதிநிதி என்ற பெருமையையும் பெறுகிறார்.

மாணவர் – போலிசார் நட்புறவுக் குழுவின் மூலம் போலீஸ் தொண்டராக 1991ல் சேர்ந்த நிசான் துரையப்பா, 1995ல் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக பதவியேற்று தனது பணியை ஆரம்பித்தார்.

அதன் பிற்கு தனது திறமையால் பலதுறைகளிலும், குறிப்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, குற்றவியல் தடுப்புப் பிரிவு மற்றும் நிர்வாகத் துறை ஆகியவற்றில் பரிணமித்த நிசான் துரையப்பா, சார்ஜன்ட், இன்ஸ்பெக்டர், சூப்பிரின்டெண்ட் என படிப்படியான பதவி உயர்வு பெற்றார்.

கடந்த ஆண்டு கனடாவின் துணை போலீஸ் அதிபராகப் பதவியேற்றிருந்தார்.

இந்த விருது குறித்து கருத்துத் தெரிவித்த நிசான் துரையப்பா, “இந்த விருது விழாவில் கலந்து கொண்டது மிகவும் உணர்வு பூர்வமானதும், எனது வாழ்வில் ஒரு பெரியதொரு சாதனை நாளாகவும் இருந்தது. பல போலிசாரும் தங்களிலான பங்களிப்பை நாட்டுக் வழங்கியே, சமுதாயத்தை ஒரு சிறந்த, நற்பண்புள்ள சமுதாயமாக வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் அவர்களின் உழைப்புக் கிடைத்த வெற்றியாகவும் இதனைக் கருதுகின்றேன்” என்றார்.k

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!