Next Tamil Nadu Assembly election will teach lesson to media

தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் மீடியாக்களுக்கும் பாடம் கற்பிக்கும்!

முன்னணி இணையதளம் ஒன்று ரஜினியை கேலி செய்து எழுதியிருந்ததைப் பார்க்க நேரிட்டது. அப்படி என்ன ‘சிரிப்பு வரும் கருத்து கணிப்பை’ ரிபப்ளிக் டிவி வெளியிட்டிருந்தார்கள் என புரிந்து கொள்ள முடியவில்லை. 23 எம்பி சீட் ரஜினிக்கு சீட் கிடைக்கும் என்ற கருத்துக் கணிப்பு உண்மையா பொய்யா என தேர்தல் வரும்போது தெரிந்துவிடும். ஆனால் 23 சீட் வாங்கும் அளவுக்கு ரஜினிக்கு பாப்புலாரிட்டி இல்லை என்பது போல ஒரு கிண்டல் அந்த இணையத் தள கட்டுரையில் இருந்தது.

சரி,அடுத்து ரிபப்ளிக் டிவி டிவியின் நடுநிலையை பற்றி ஒரு நகைச்சுவை வேறு. என்னமோ இந்த இணைய தளத்தின் தி.மு.க சப்போர்ட் பற்றி யாருக்குமே தெரியாது என நினைத்து எழுதியிருக்கிறார்கள். அதுதான் வேடிக்கை.

கடந்த 7 வருடங்களாக அந்த இணைய தளத்தை படித்து வருகிறேன். ரஜினி பற்றிய ஸ்கூப் நியூஸ் போட்டுப் போட்டே மிகவும் பிரபலமானது அந்த இணையதளம் என்றால் அது மிகையல்ல. ஏனென்றால், ரஜினி பற்றிய நியூஸ் போடும் போது அது இந்தியாவை தாண்டி உலகமெங்கும் ஹிட்ஸ் வாங்கி கொடுக்கிறது என்பதே உண்மை. இந்தியாவை தாண்டி வாழும் இந்தியர்கள், தமிழர்கள் பிரபலமாக படிப்பது ரஜினி பற்றிய செய்திகளை மட்டும்தான். திராணி இல்லாதவர் என்பது போல அவர்கள் இப்போது சித்தரித்த ரஜினியால், அந்த இணையதளம் பிரபலமானது என்பதே உண்மை.

ரஜினி யின் அரசியல் அறிவிப்பை அந்த இணையத்தளம் கவர் பண்ணிய விதத்தை பார்த்து ரஜினியின் பிஆர்ஓ வே மிரண்டு போயிருப்பார். உலக அளவில் ஹிட்ஸ் களை அள்ளினார்களே. பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி என்பது அவர்கள் கொள்கை போலும்.

அவர்கள் கூஜா தூக்கும் தி.மு.க பற்றி சொல்கிறேன். 1991ல் வெறும் 2 MLA சீட் மட்டும் வாங்கிய கட்சி. அதுதான் அப்போது அவர்களின் வாக்கு வங்கியும் கூட. எழுந்து நிற்பதற்கு கூட எலும்பு இல்லாமல் இருந்த தி.மு.க வை தனது ஆதரவால் வெற்றிபெற செய்தவர் ரஜினி. துறைமுகம் தொகுதியில் “ரஜினியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்” கருணாநிதி என போஸ்டர் அடித்ததை மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு பிறகு திமுகவால் பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெறவே முடியவில்லை.

2004 ல்- 40க்கு /40 எம்பிக்கள் வெற்றி பெற்றது ஒன்றும் மக்கள் திமுக மேல் வைத்த நம்பிக்கையில் இல்லை. கலைஞர் கைது, வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர், வைகோ நடைபயண அனுதாபங்களை வைத்து வெற்றி பெற்றார்கள். தமிழ் நாட்டின் முக்கியமான தண்ணீர் பிரச்னையை அந்த வெற்றியை வைத்து சத்தியமாக தீர்த்திருக்க முடியம். ஆனால் மந்திரி பதவிக்காக மட்டும் டெல்லி வெயிலில் காய்ந்தார் கருணாநிதி.

பிறகு 2006ல் ஒரு மைனாரிட்டி வெற்றி .2016ம ஆண்டு தேர்தல் பற்றி சொல்லத் தேவையில்லை. இன்று ரஜினியை பழித்துப் பேசும் அந்த இணையதளம் கூட தி.மு.க வெற்றிபெறும் என கருது கணிப்பை வெளியிட்டிருந்தார்கள். அதுதான் இப்போது நகைச்சுவையாக இருக்கிறது இப்போது வரை கூட்டணி கட்சிகளின் கால்களை கழுவி ஓட்டுக்களை சிதற விடாமல் சேர்ப்பது தான் தி.மு.க வேலை. இப்படி பட்ட கட்சிக்கு தான் அந்த முன்னணி இணையதளம் கொடி பிடிக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.

ரஜினி வெறும் சினிமா நடிகர் மட்டுமல்ல. கள அரசியலில் இல்லாத அரசியல்வாதியும் கூட. வேறு யாராவதாக இருந்திருந்தால் அவர்கள் இவ்வுளவு நாள் சூப்பர் ஸ்டாராகவும் இருந்திருக்க முடியாது. கமல் ஹாசனின் சமீபத்தியப் படங்களின் வசூல் விஜய், அஜீத், சூர்யா படங்களை விடவும் குறைவு என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால் ரஜினி இன்றும் பாக்ஸ் ஆபீஸில் முடிசூடா மன்னர்.

மக்கள் ரஜினியை வெறும் நடிகராக பார்ப்பதே இல்லை. அவரிடம் வேறு எதோ ஒன்று இருக்கிறது என நினைக்கிறார்கள் என்பதே நிதர்சனம். எனவே, ரஜினியின் அரசியல் சக்தியை நடிகர் என்ற அளவுகோலை வைத்து மதிப்பிட முடியாது. இறுதியாக, ரஜினியை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் தப்பில்லை ஆனால் அது ஆக்கபூர்வமாக, நேர்மையாக இருந்தால் நல்லது. ரஜினியின் ஒரே பலவீனம் அவருக்கு தி.மு.க போல உட்கட்சி அமைப்பு இல்லாததே. அந்த வேலைகளும் இப்போது ஆரம்பமாகிவிட்டது.

வரப்போகும் தேர்தல் களம் தமிழக அரசியலில் புதிய விடியலை ஏற்படுத்தும். சுய மரியாதை இல்லாத மீடியாக்களுக்கும் கண்டிப்பாக பதிலடி தரும்.

– சுப்ரமணியன்

Author: admin
Tags

Comments (1)

  1. Pragadeesh B says:

    Fitting reply to Oneindia!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!