2017 புத்தாண்டு பலன்கள் - வணக்கம் இந்தியா ஸ்பெஷல் பகுதி 1 - VanakamIndia

2017 புத்தாண்டு பலன்கள் – வணக்கம் இந்தியா ஸ்பெஷல் பகுதி 1

கணித்தவர் : ஜோதிட விஷாரத் அ.பாலசேகர் எம்.எஸ்.சி (ஜோதிடம்)

இந்த 2017ம் ஆண்டில் பெரிய கிரகங்களான குரு, ராகு, கேது, சனிப் பெயர்ச்சிகள்
நடைபெறுகின்றன. எனவே தனிமனிதன் வாழ்விலும், உலக அளவிலும் பெரிய மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்

குரு செப்டம்பர் 11ம் தேதியும், ராகு, கேது ஆகஸ்ட் 19ம் தேதியிலும் மாறுகிறது. முன்னதாக ஜனவரி 25ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.

சனி ஜனவரி 25ம் தேதியிலிருந்து விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு மாறுகிறது. பின் வக்ர கதியில் ஜூன் 22ம் தேதி மீண்டும் விருச்சிகத்திற்கு வருகிறது. அடுத்து அக்டோபர் 25ம் தேதி தனுசுக்கு மாறுகிறது.

பொதுவாக குருப்பெயர்ச்சிக்கு பிறகு வியாபாரம் செழித்தோங்கும், பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். மக்களிடம் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

அக்டோபர் 25ம் தேதி சனிப்பெயர்ச்சிக்குப் பிறக்கு ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் லாபகரமாக அமையும். வன்முறை தீவிரவாதம் குறைந்து காணப்படும்.

இனி 12 ராசிகளுக்கான பலன்களைப் பார்ப்போம்.

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்)

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி 25 தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரையிலும் அதன் பிறகு அக்டோபர் 25ம் தேதியிலிருந்தும் அஷ்டம சனி விலகுகிறது. இதுவரையிலும் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும்.

அயல் நாட்டில் வேலை கிடைக்கும் . ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் சிறப்பாக நடைபெறும். வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தடைபடுகின்ற திருமணம் செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகு நடைபெறும். கூட்டு வியாபாரம் லாபகரமாக அமையும். முதலீடுகளிலிருந்த வருமானம் வர ஆரம்பிக்கும்.

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ஆகஸ்ட் 19ம் தேதிக்குப் பின் ராகு கேது பெயர்ச்சி, தாயாரின் உடல் நலத்தை பாதிக்கும்.

வீடு மனை வாங்கும் போது பத்திரங்களை நன்றாக பரிசோதித்து வாங்க வேண்டும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். புதுத் தொழில்கள் ஆரம்பிக்க யோகம் உண்டாகும். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்ட நேரிடும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4ம் பாதம், ரோகிணி, மிருகசீரீடம் 1,2ம் பாதம்) ஜனவரி 25ம் தேதியிலிருந்து ஏப்ரல் 16ம் தேதி வரையிலும், அக்டோபர் 25ம் தேதிக்குப் பிறகும் அஷ்டம சனியின் பிடியில் இருக்கப் போகிறீர்கள். எனவே தொழில் ரீதியான பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும்.

வேலையில் துன்பங்கள் உண்டாகும். தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு பதவி பறிபோகலாம்.

கௌரவம், மதிப்பு பாதிக்கப்படும். வம்பு வழக்குகள் வந்து சேரும். குருப்பெயர்ச்சி செப்டம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. அதன் பிறகும் நிலமை சீரடையாது. உடல் நலக்குறைவு உண்டாகும்.

இன்சூரன்ஸ் , பி.எஃப் பணம் எதிர்பார்ப்போருக்கு கிடைக்கும். ஆகஸ்ட் 19ம் தேதி ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு இட மாற்றம் உண்டாகும். மன அமைதி கெடும். அயல் நாட்டில் இருப்போர் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பொதுவாக ரிஷப ராசிக்காரர்களுக்கு 2017 ஒரு சோதனையான வருடம் ஆகும்.

மிதுனம்

(மிருகசீரீடம் 3,4ம் பாதம், திருவாதிரை , புனர்பூசம் 1,2,3ம் பாதம்)

ஜனவரி 25ம் தேதிக்கு பிறகும், அதன் பிறகு அக்டோபர் 25ம் தேதிக்குப் பின்னும் கண்டச் சனி நடைபெறுவதால், மிகுந்த கவனத்துடன் காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வண்டி, வாகனம் ஓட்டும் போதும் கவனம் தேவை.

அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். ஆனால் செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகு நிலமை சீரடையும். திருமணம் நடைபெறும். உத்தியோகம் கிடைக்கும். புதுத் தொழில்கள் கை கூடும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதுப் பதவிகள் கிடைக்கும்.

ஆகஸ்ட் 19, ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகலாம். பணம் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள் உண்டாகும். பொதுவாக நன்மையும் தீமையும் கலந்த ஆண்டாக 2017 அமையும்.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். பிரிவு ஏற்படலாம். உத்தியோகத்தில்
பிரச்சனை உண்டாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும்.

திருமணம் தடைபடும். குருப் பெயர்ச்சிக்குப் பின் வாகனம், வீடு வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பெற்றோர்கள் உடல நலம் பாதிக்கப்படும். அயல் நாட்டுக் கல்விக்கு வாய்ப்பு உண்டு. கடன் வாங்க வேண்டியது வரும்.

ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் உடல் நலம் சிறிது பாதிக்கப்படும். மன அமைதி குறைவாகவே இருக்கும். அயல் நாட்டுப் பிரயாணம் ஏற்படும்.

சிம்மம்

(மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம்)

எதிர்பாராத பணம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். காதல் விவகாரங்கள்
திருமணத்தில் முடியும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். உத்தியோகம் கிடைக்கும்.

வேலை மாற்றம் ஏற்படும். வீடு வாகனங்களை விற்று புது வாகனங்கள், வீடு வாங்குவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தரும். நேர்முகக் காணலில் வெற்றி கிட்டும். புது உத்தியோகம் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் ஓட்டும் போது கவனம் தேவை. கடன் சுமை குறையும். பொதுவாக இந்த ஆண்டு நன்மையே நடந்து வரும்.

கன்னி

(உத்திரம் 2,3,4ம் பாகம், அஸ்தம், சித்திரை 1,2, பாகம்)

வாகனம், வீடு வாங்க யோகம் உண்டாகும். கல்வியில் தடைகள் உண்டாகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரங்களில் தோல்வி உண்டாகும்.

குழந்தைகளினால் மன அமைதிக் குறைவு உண்டாகும். நிலம் சம்பந்தமான வழக்குளில் வெற்றி கிடைக்கும். புது உத்தியோகம் கிடைக்கும். தடைபட்டு நின்ற திருமணம் நடைபெறும். பணவசதி தாராளமாக இருக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் லாபகரமான நடைபெறும். ஆரம்பட பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். கூட்டு வியாபாரம் ஆரம்பிப்பீர்கள். பொதுவாக இந்த ஆண்டு சிறப்பாகவே இருக்கும்.

(நாளை தொடரும்…)

குறிப்பு:

ஜோதிடர் அ.பாலசேகர்

பி.எஸ்சி மற்றும் பேச்சலர்ஸ் ஆஃப் லைப்ரரி சயன்ஸ் படித்துவிட்டு,இளவயதில் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றி வந்த பாலசேகர், புதிய சிந்தனைகள் உள்ளவராக இருந்தார். புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். நவீன கருத்துக்களுடன் நாடகங்கள் எழுதி இயக்கி சக இளைஞர்களுடன் மேடையாக்கம் செய்து வந்தார்.

பிரபல ஜோதிடர் ஒருவருக்கும் இவரது குழுவைச் சார்ந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஜோதிட புத்தகங்களை படித்து தெரிந்து விட்டு வந்து பேசுகிறேன் என்று பாலசேகர் எழுந்துவிட்டார். அந்த ஜோதிடரிடமே சில புத்தகங்களையும் பெற்றுக்கொண்டார்.

இவர் ஜோதிடம் படித்ததைத் தெரிந்து கொண்ட உறவினர்கள், தங்களுக்கு பலன் சொல்லுமாறு வினவினார்கள்.. பாலசேகரின் கணிப்பு முற்றிலும் மாறாக இருந்தது. விவாகரத்துக்காக நீதிமன்றம் வரை சென்றவர்கள் நிச்சயம் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்று அதன் சூழலையும் விவரித்தார்.

உறவினர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்த நிலையில் , அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்ததைப் பார்த்து பாலசேகரின் கணிப்பு கவனத்திற்கு உள்ளானது. இதைப்போல் மேலும் பல கணிப்புகள் சரியாக இருந்ததை பார்த்தபிறகு, இன்னும் முழுமையாக ஜோதிடத்தை கற்றுக்கொள்ள விரும்பினார்.

ஆரம்பகாலத்தில் வழக்கமான ஜோதிட முறையை பின்பற்றியவர், பின்னர்கே.பி ஜோதிடம், நாடி ஜோதிடம், Horory ஜோதிடம் என பல முறைகளையும் கற்றறிந்தார். ஜோதிடப் பெரியவர் ஒருவர் அவருக்கு தொன்மையானபுத்தகங்களைக் கொடுத்து ஆசிர்வதித்து ஜோதிடத்தை முழு நேரப் பணியாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பாலசேகரும் ஜோதிடத்திற்காக தன்னுடைய முழு நேரத்தையும் அர்ப்பணித்துக் கொண்டார்.ஜோதிடத்தில் எம்.எஸ்.சி மேற்படிப்பும் கற்று தேர்ந்தார்.1978ல் ஜோதிடப் பலன் கூற ஆரம்பித்த இவருக்கு பல முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உண்டு.

ஜெயலலிதாவுக்கு…

1997ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்றுஅனைவரும் கூறிவந்த நிலையில், அவர் நிச்சயம் மீண்டும் முதல்வர் ஆவார் என்று (எக்ஸ்பிரஸ் ஸ்டார்டெல்லர் ல்) கணித்திருந்தார்.

அப்போது இந்த கணிப்பு மற்றவர்களால் வேடிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் 2001 ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆன போது மேலும் பல அரசியல் தலைவர்கள் இவரது வாடிக்கையாளர் ஆனார்கள். தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் உட்பட அவருடைய பல அரசியல் கணிப்புகள் துல்லியமாக இருந்து வருகிறது. ஜோதிஷ் விஷாரத் என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஜோதிடர் ’ஜோதிஷ் விஷாரத்’ அ.பாலசேகர் எம்.எஸ்.சி அவர்களை Balasekar@aryainfosystem.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!