ஆதரவு கேட்டவருக்கு நோஸ் கட்.. கோடம்பாக்கம் பரபரப்பு - VanakamIndia

ஆதரவு கேட்டவருக்கு நோஸ் கட்.. கோடம்பாக்கம் பரபரப்பு


நான் தான் சகலகலா வல்லவன்னு அரசியலில் புதுசா குதிச்ச நடிகருக்கு கோடம்பாக்கம் பிரபலங்கள்கிட்டே ஆதரவு கேட்டு போயிருக்காரு மூக்கு நடிகர். மேற்கே, தெற்கேன்னு ஏரியா, சாதி வாரியா ஆள் தேடுறாங்களாம்.

சிவமைந்தன், பழைய மைக், நடிகர், லொடுக் பாண்டி, மூத்த நாட்டாமை, வெளிச்ச நடிகர் என நடிகர் பட்டாளத்தையே பாத்துருக்காங்க. எல்லாரும் சொல்லி வச்சமாதிரி ஒரே டைப் கேள்விளைக் கேட்டாங்களாம்.

இவரு ஏன் அரசியலில் குதிச்சாரு… யாரு இவரை தூண்டிவிட்டாங்க.. இவருக்கு எத்தனை ரசிகருங்க இருக்காங்கன்னு நமக்கு தெரியாதா.. ஜெயிக்கிறதுக்கா குதிச்சிருக்காரு. உச்ச நடிகரை கெடுக்குறதுக்கு எதுக்கு ஆதரவு கேட்டு வந்தீங்கன்னு விளாசிட்டாங்களாம்.

கோடம்பாக்த்திலிருந்து இன்னொரு முதல்வரா வர்றதுக்கு ’உச்ச நடிகருக்கு’ பிரகாசமான வாய்ப்பு இருக்கும் போது, குட்டைய கிளப்புறவரிடம் சேராமல் இருப்போம் ன்னு முடிவுலே இருக்காங்களாம்.

சங்கத்துக்கே தலைவர்ன்னாலும், தேவையில்லாமல் மூக்கை நீட்டி மூக்குடை பட்டு வந்தாராம் மூக்கு நீண்ட நடிகர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!