'வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை' ... களை கட்டுது ரஜினி அரசியல்! - VanakamIndia

‘வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை’ … களை கட்டுது ரஜினி அரசியல்!

ப்ரிஸ்கோ (டெக்ஸாஸ்) ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டதால், அவர் பெயரில் இயக்கங்கள், பேரவைகள் போன்றவை புதிதாக உருவாக ஆரம்பித்துள்ளன.

அதுவும் இங்கல்ல.. வெளிநாடுகளில். வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை என்ற பெயரில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

அந்தப் பேரவையின் பத்திரிகைச் செய்திக் குறிப்பு –

வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையின் சார்பில் நிர்வாகக் குழுவினர் கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

1. தலைவர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை மனமார வரவேற்று பாராட்டுகிறோம்

2. ரஜினியை அரசியலில் வரவேற்றுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

3. ரஜினிக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வரும் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஜீவாவுக்கு நன்றிகள்.

4. ரஜினி அரசியலுக்கு வருவதை, இந்திய ஜனநாயகத்திற்கு புறம்பாக எதிர்த்து வரும் சீமான் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரையும் வன்மையாக
கண்டிக்கிறோம்

5. கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்த மண்ணின் மைந்தர், பச்சைத் தமிழர் ரஜினியை, வேற்று மொழிக்காரர் என்று ஏளனமாகக் கூறி வரும் சீமான் தனது பேச்சுக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறோம்.

6. தமிழர்களை ஏமாற்றும் சீமான், பிறந்த ஊர், தேதி, பெற்றோர், படித்த
ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட
வேண்டும்.

7. ரஜினிக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.

8. ரஜினியின் அடுத்த படங்களான ’2.0’ மற்றும் ’காலா’, ரசிகர்களையும் பொதுமக்களையும் மகிழ்வித்து மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறோம்.

9. தலைவர் ரஜினியின் அன்பு ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஒன்று திரண்டு அரசியல் வெற்றிக்கு பாடுபடுவோம்.

வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை

ஃப்ரிஸ்கோ, டெக்சாஸ், யு.எஸ்.ஏ

நாள் : மே 27, 2017

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

US Tamils have started a federation in the name of Rajinikanth in Frisco, Texas.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!