அந்தமான் தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலுக்கு வாய்ப்பில்லை!! - VanakamIndia

அந்தமான் தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலுக்கு வாய்ப்பில்லை!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாகவும் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கலாம் என கூறியிருந்தது.

இதனால் சென்னை உட்பட வடதமிழகத்தில் மீண்டும் கன மழையும் பெய்யும் என்றும் கூறப்பட்டது. இதனால் மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய காற்றழுத்தத்தை ஒரு மொக்க காற்றழுத்தம் என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த புயலைக் கண்டு அச்சப்பட தேவையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர கடற்பகுதியை நெருங்கும்போது அசாதாரண காரணங்களால் இந்த காற்றழுத்தும் மொக்க காற்றழுத்தமாக பலவீனடையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!