திருச்செந்தூரில் தங்கத்தேர்.. நெல்லையில் ரத்ததானம்! நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர்களின் ஐந்து நாள் விழா.. - VanakamIndia

திருச்செந்தூரில் தங்கத்தேர்.. நெல்லையில் ரத்ததானம்! நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர்களின் ஐந்து நாள் விழா..

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர்கள் சார்பில் ரஜினியின் 68 வது பிறந்தநாள் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர், நெல்லையில் ரத்ததானம், 2000 பேருக்கு அன்னதானம் என்று அமர்க்கப்பளப் படுத்திவிட்டார்கள்.

டிசம்பர் 9ம் தேதி சனிக்கிழமை, ரத்ததானத்துடன் விழாவை தொடங்கினார்கள். நெல்லை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணைத் தலைவர் தாயப்பன் மாநகர தலைவர் பகவதி ராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். முகாமில் தாயப்பன், பகவதி ராஜன், கார்த்திகேயன், ரஜினி பகவதி, தளபதி ராஜ், பூக்கடை ராஜ்குமார், கணேசன், சுபாஷ், விநாயகம், முத்து மற்றும் ஏராளமான ரசிகர்கள் இரத்த தானம் வழங்கினர்.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகேயன் தலைமையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் திருவிழா நடைபெற்றது. தாயப்பன், பகவதி ராஜன், ரஜினி பகவதி, தளபதி ராஜ் சரண், தல சந்தீப் ஆகியோர் முன் நின்று நடத்தினர். விழாவில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்ட ரசிகர்களும் கலந்து கொண்டார்கள்.

சூப்பர்ஸ்டார்ஸ் சினிமாஸ். எம். பாலசுப்ரமணியன், சிவகங்கை மாவட்டத் தலைவர் கல்லல் எம்.ரவிக்குமார், பொறுப்பாளர் சி. மோசஸ் குமார், திருப்பத்தூர் நகரத் தலைவர் கவிக்குமார், மதுரை மாவட்ட மாவட்ட நிர்வாகிகள் அழகர், பால்பாண்டி, தூத்துக்குடி ஸ்டைல்கிங் ரஜினி மன்றத் தலைவர் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சென்னை, கடலூர், மதுரை, சேலம், கோவை, திருச்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து இணையத்தள ரசிகர்கள் பலரும் வந்திருந்தார்கள். தங்கத்தேர் விழாவில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

டிசம்பர் 11, திங்கட்கிழமை, நெல்லை டவுன் தாயம்மை பள்ளியில் தாயப்பன தலைமையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி இனிப்பு வழங்கப்பட்டது .. மேலும் 50 குழந்தைகளுக்கு தட்டு மற்றும் டம்ளர் வழங்கப்பட்டது. பகவதி ராஜன் கார்த்திகேயன் ரஜினி பகவதி தளபதி ராஜ் பாபா ரவிக்குமார் பூக்கடை ராஜ்குமார் ஆண்டியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

ரஜினியின் பிறந்தநாளான, டிசம்பர் 12ம் தேதி செவ்வாய்கிழமை, அதிகாலை 5 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் ரஜினிக்காக சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவ அடிகளார் ஆசியுடன் பக்தர்களுக்கு பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. பகவதி ராஜன் ஏற்பாடு செய்திருந்தார்

அன்று காலை 10 மணிக்கு, பாளையங்கோட்டை சுமூக விநாயகருக்கு ரஜினி பகவதி தளபதி ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் தாயப்பன் தலைமையில் சிறப்பு பூஜையும் 68 நேர்த்தி தேங்காய் விடலையும் உடைக்கப்பட்டது/

மதியம் 12 மணிக்கு மேல் நெல்லை டவுண் தொண்டர் சந்நிதியில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தாயப்பன் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் மதியம் 1 மணிக்கு ரஜினி பகவதி தளபதி ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் பாளை மெயின் ரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் 5 கிலோ எடையுள்ள டிஜிட்டல் கேக் வெட்டி இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. தாயப்பன் பகவதி ராஜன் பூக்கடை ராஜ்குமார் பாபா ரவிக்குமார் முத்து மற்றும் சுமார் 100 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 7 மணிக்கு டவுன் ஈசானி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 500 பேருக்கு புளியோதரை சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது போத்தீஸ் முத்து ஏற்பாடு செய்திருந்தார். தாயப்பன் தலைமை தாங்கினார்.. டாக்டர் அருண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பகவதி ராஜன், ரஜினி பகவதி தளபதி ராஜ் பூக்கடை ராஜ்குமார், பாபா ரவிக்குமார், ஆசுகவி, ஆண்டியப்பன், காசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 13, புதன்கிழமை, நெல்லை அரசு மருத்துவமனையில் தாயப்பன் தலைமையில் காச நோயாளிகள் 10 பேருக்கு 1 மாதத்திற்கான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடி அசத்தினார்கள் நெல்லை மாவட்ட ரசிகர்கள்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!