நோ மூக்குத்தி, நோ மோதிரம்.. அட தலைமுடிக்கு பின் கூட குத்தக் கூடாதாம்! - கிறுகிறுக்க வைக்கும் நீட் - VanakamIndia

நோ மூக்குத்தி, நோ மோதிரம்.. அட தலைமுடிக்கு பின் கூட குத்தக் கூடாதாம்! – கிறுகிறுக்க வைக்கும் நீட்

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளதால் தேர்வு மையத்தினுள் என்னென்ன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது, செய்யக் கூடாதவை என்னென்ன‌‌ என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உண்மையிலேயே இத்தனை கெடுபிடி தேவையா… அட இப்படி ஒரு தேர்வுதான் தேவையா எனக் கேட்க வைத்துள்ளது அந்த அறிவிப்பு.

இந்தாங்க அந்த அறிவிப்பு:

தேர்வு மையத்திற்கு காலை ‌‌9.‌30 மணிக்கெல்லாம் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர், உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

காகிதத் துண்டுகள், பென்சில் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்து வித ‌பாக்ஸ்க்ளும் , பவுச், ‌கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், அட்டை, பெண் டிரைவ், ரப்பர், லாக் அட்டவணை, ஸ்கேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

தொலைத் தொடர்பு சாதனங்களான கைபேசி, ப்ளூடூத், இயர்போன், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் உள்ளிட்டவைகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. பெல்ட், தொப்பி, கைப்பைகள், கண்ணாடிகள், வாலட் உள்ளிட்டவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ,மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், பேட்ஜ், சட்டை பின், கைக் கடிகாரம், ப்ரேஸ்லெட், உள்ளிட்ட அணிகலன்களை பயன்படுத்தக் கூடாது. தலைக்கு ஹேர்பின் கூட குத்தக் கூடாது.

அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிய வேண்டும். ஆடையில் பெரிய பட்டன்களோ, பேட்ஜ்கள், பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகை காலணிகளை அணியக் கூடாது.

புகைப்படக் கருவி எடுத்துவரக் கூடாது. எந்தவிதமான உலோக பொருட்களையும் கொண்டுவரக் கூடாது. தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்களுக்கும் அனுமதி இல்லை.

தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தேர்வு மையத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

இந்த விதிமுறைகளை மீறினால் குறிப்பிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

Rules and regulations for NEET Exam students

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!