பூமியைப் போல இருக்கும் 10 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு! - VanakamIndia

பூமியைப் போல இருக்கும் 10 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

நாசா: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, மேலும் பத்து பூமியைப் போன்ற புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த பத்து கிரகங்களும் அப்படியே பூமியை ஒத்து உள்ளதாகவும், இங்கு உயிரினங்கள் வசிக்கத் தேவையான அனைத்து கூறுகளும் இருக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கிதான் இந்த கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது.

பூமியைப் போலவே அளவிலும், சூழலை ஒத்தும் பல கிரகங்கள் இதற்கு முன்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

இங்குள்ள அதே தட்பவெப்பம், கிட்டத்தட்ட பூமியை போன்ற சைஸ் என இந்த புதிய கிரகங்கள் பெரும் நம்பிக்கை தருவனவாக உள்ளனவாம். இங்கு உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

https://www.nasa.gov/sites/default/files/images/286253main_kepler-milkyway-fov-full_full.jpg
நமது பால்வழி மண்டலத்திற்கு வடக்கே உள்ள சிக்னஸ் நட்சத்திரக் கூட்டத்தில் (Cygnus constellation) இந்த புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் நட்சத்திரங்களை ஆராய்ந்ததில் இந்த பத்து தேறியுள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!