டல்லாஸில் நள தமயந்தி : 100 கலைஞர்களுடன் ப்ராட்வே ஸ்டைல் நாட்டிய நாடகம் - VanakamIndia

டல்லாஸில் நள தமயந்தி : 100 கலைஞர்களுடன் ப்ராட்வே ஸ்டைல் நாட்டிய நாடகம்

டல்லாஸ்(யு.எஸ்): மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 10ம் தேதி, டல்லாஸ் டவுண்டவுன் மெஜஸ்டிக் அரங்கத்தில் நள தமயந்தி நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.

இலனாய் மாநிலம் பியோரியா நகரில் உள்ள மைதிலி டான்ஸ் அகடமியின் 70க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் டல்லாஸ் வருகை தர உள்ளார்கள். மேலும் உள்ளூர் நடனக்கலைஞர்களும் இணைந்து பங்கேற்கிறார்கள்.

பாரம்பரிய இந்திய நடனத்துடன், மத்திய ஆசிய, சீன மற்றும் பாலே நடனங்களுடன் ‘ நள தமயந்தி’ புராணக் கதையை நாட்டிய நாடகமாக வழங்க உள்ளார்கள்.அமெரிக்காவில் பிரபலமான ’ப்ராட்வே ஷோ’ போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காகவே டல்லாஸில் ப்ராட்வே ஷோ நடைபெறும் பிரபல மெஜஸ்டிக் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் அறக்கட்டளைக்கு நிதிதிரட்டுவதற்காகவும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் இந்த நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக திருமண அழைப்பிதழ் போல், தமிழகத்தில் அச்சடிக்கப்பட்டு, தருவிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்களை, சங்க உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் நேரடியாக கொடுத்து அழைப்பு விடுக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு www.dfwmts.org என்ற இணையதளத்தில் காணலாம்.

டல்லாஸில் இத்தகைய பிரமாண்டமான ’இந்தியன் ப்ராட்வே ஷோ’ நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

சங்க நிர்வாகிகளும் தன்னார்வத்தொண்டர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த காணொளி இணைப்பு

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!