இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்! - VanakamIndia

இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்!

ஹைதராபாத்: பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

‘அமரன்’ திரைபடத்தின் மூலம் 1992 ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஆதித்யன்.

இவர், ‘நாளைய செய்திகள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘லக்கி மேன்’, ‘அசுரன்’, ‘மாமன் மகள் ‘உள்ளிட்ட 50க்கும் மேல்ப்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களுக்கு இசையமைத்ததுடன். பல ரீ-மேக் ஆல்பங்களில் பாப் பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் பிரபல தொலைகாட்சி ஒன்றில் எட்டு ஆண்டுகளுக்கும் மேல் சமையல் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய மரணம் குறித்து அறிந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!