அட, இந்த விஷயம் அவருக்குத் தெரியுமா? ட்ரம்ப் கோவக்காரராச்சே…என்னாகுமோ! - VanakamIndia

அட, இந்த விஷயம் அவருக்குத் தெரியுமா? ட்ரம்ப் கோவக்காரராச்சே…என்னாகுமோ!

டெல்லி: உலக அளவில் ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பின்னுக்கு தள்ளிவிட்டாராம். இது குறித்து ஃபேஸ்புக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான இயக்குனர் அங்கி தாஸ் இது குறித்து கூறியுள்ளார். 2014 ம் ஆண்டு மோடி பதவியேற்ற போது ஃபேஸ்புக்கில் அவரைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பது லட்சமாக இருந்தது

தற்போது பிரதமர் மோடியைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. கிடைத்துள்ள புள்ளி விவரங்களின் படி, உலக அளவில் பிரபலங்களை பின் தொடர்வோர் பட்டியலில் மோடி முதலிடத்தையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளதாக் அங்கி தாஸ் கூறியுள்ளார்.

மோடி அவருடைய அம்மாவை சந்தித்த போது எடுத்த புகைப்படம் 50 ஆயிரம் ஷேர்களையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் லைக்குகளையும் பெற்றதாம். பெற்ற தாயை பிரதமர் சந்திப்பது அவ்வளவு பெரிய விஷயமாப்பா!

மூன்றாவது இடத்தை பிரதமர் நரேந்திர மோடி பக்கம் பிடித்துள்ளதாம். அமெரிக்காவை மீண்டும் புகழ்ப் பெறச்செய்வோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்தார். இன்னும் அதே முழக்கத்தை முன் வைத்து வருகிறார் ட்ரம்ப்.

ஃபேஸ்புக்கில் இந்தியப் பிரதமருக்கு அடுத்த இடம் தான் என்று ட்ரம்புக்குத் தெரியுமா? தெரிந்தால் அதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதற்கும் ட்ரம்பின் ட்விட்டர் பக்கம் மீது ஒரு கண் வைத்திருப்போம். திடீர்னு அர்த்த ராத்திரியில் ஏதாவது ட்வீட் பண்ணினாலும் பண்ணுவார்.

English Summary:

Prime Minister Modi is in the top of list and has more followers in facebook than American President Trump.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!