MKStalin met CM Edapadi Palanichami

போக்குவரத்து கழகத்தை சீர் செய்ய பரிந்துரைகள்… முதல்வரிடம் நேரில் அளித்தார் ஸ்டாலின்!


சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் இரவோடு இரவாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு நடத்தில் திமுக சார்பில் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஸ்டாலினிடம் சம்பர்ப்பித்தது.

இன்று மதியம் சுமார் 12 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ஸ்டாலின், திமுக சார்பில் தயார்செய்யப்பட்ட போக்குவரத்து கழக சீர் அறிக்கையை வழங்கினார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், ‘போக்குவரத்து கழகத்தை எப்படி சீர் செய்வது குறித்து திமுக சார்பில் அமைப்பட்ட குழு 27 பரிந்துரைகளை வழங்கியது. இதன்படி செயல்பட்டால், மக்கள் தலையில் பஸ் கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த அறிக்கையின்படி போக்குவரத்து கழகத்தை மக்களின் சேவையாக கருதி நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும், டீசல் மீதான கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும். ஒரே சீரான 10 சதவீத ஜி எஸ் டி வரியை விதிக்க வேண்டும்.

டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு நல்லிணக்கக் கூட்டம் நடத்த வேண்டும், பஸ்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த பரிந்துரையில் கூறியுள்ளோம். இந்த பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த தவறினால் விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட ஆலோசனைகளை எடுப்போம்.

மேலும், சட்டசபையில் ஜெயலலிதா படத்தை வைப்பதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் என யாரை அழைத்தும் எவரும் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை… ஏன் என்ற காரணத்தை இந்த அரசு விளக்க வேண்டும்” என்று கூறினார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!