அமேசானை வீழ்த்த ஃப்ளிப்கார்ட்டுடன் கை கோர்க்கும் மைக்ரோசாஃப்ட், இபே, டென்சென்ட்.. 1.4 பில்லியன் டாலர் முதலீடு! - VanakamIndia

அமேசானை வீழ்த்த ஃப்ளிப்கார்ட்டுடன் கை கோர்க்கும் மைக்ரோசாஃப்ட், இபே, டென்சென்ட்.. 1.4 பில்லியன் டாலர் முதலீடு!

பெங்களூரு: இந்தியாவிலும் கோலோச்சி வரும் அமேசான் இகாமர்ஸ்க்கு போட்டியாக, ஃப்ளிப்கார்ட்டுடன் மைக்ரோசாஃப்ட், இபே மற்றும் டென்சென்ட் நிறுவனங்கள் கை கோர்த்துள்ளன.

மூன்று நிறுவனங்களும் சேர்ந்து 1.4 பில்லியன் டாலர்களை ஃப்ளிப்கார்ட்டில் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவின் இபே விற்பனை இனி ஃப்ளிப்கார்ட்டுடன் இணைக்கப்படும்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃப்ளிப்கார்ட் கடந்த பத்து ஆண்டுகளாக பல சவால்களைச் சந்தித்து இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது
.
மைக்ரோசாஃப்ட் முதலீடு மூலம், இனி மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகள் ஃப்ளிப்கார்ட்டில் சலுகை விலையில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

டென்சென்ட் ஆன்லைன் தொழில் நுட்பம் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் உள்ளிட்டவற்றை ஃப்ளிப்கார்ட்டுக்கு வழங்க உள்ளது.

ஃப்ளிப்கார்ட்டில் இதுவரையிலும் நேஸ்பர்ஸ் க்ரூப், டைகர் க்ளோபல் மேனஜ்மெண்ட் , அக்சல் பார்ட்னர்ஸ் ம்ற்றும் டிஎஸ்டி க்ளோபல் நிறுவனங்கள் முதலீட்டார்களாக இருந்தனர்.

அவர்களுடன் மைக்ரோசாஃப்ட், இபே மற்றும் டென்சென்ட் இனைந்து அமேசானின் இந்திய வணிகத்திற்கு கடும் போட்டியாக ஃப்ளிப்கார்ட் உருவெடுக்கிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் அமேசான் நிறுவனமும் அமெரிக்காவில் சியாட்டலில் தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

புதிய முதலீடுகள் மூலம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 11.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

-இர தினகர்

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!