பொங்கல் சிறப்புப் பாடல்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அமெரிக்காவில் வெளியிட்டார்.. - VanakamIndia

பொங்கல் சிறப்புப் பாடல்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அமெரிக்காவில் வெளியிட்டார்..

Pongal Song | தை தை பொங்கலு பாடல் | பொங்கல் பாடல் | ValaiTamil.com, Vsharp

பொங்கலுக்கு ஒரு புது பாடல் ஆடலுடன் #PongalSong #ThaiThaiPongalu #ThaieThaiePongalu Music : Vasanth Vaseegaran Singers : Balaji Prakash Rao, Harini Vasudevan, Jayalakshmi Radhakrishnan Lyrics : Manikandan Anandaraj, Sa.Parthasarathy, Nithilaselvan Muthusamy, Yogaraj, Mahendiran Periyasamy, Rajesh Swaminathan, Rajaram Srinivasan, Iyappan Raman Video & Photography: Kannan Kunchithapadam, Rathakrishanan Chandrakumar Concept & Co-ordination Sa.Parthasarathy (Concept & Producer of “Tamil Birthday Song” ) ValaiTamil.com ▬▬ Share, Support, Subscribe ▬▬ If you like this video share to your friends too ..

வாஷிங்டன்: அமெரிக்கத் தமிழர்களின் உருவாக்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்புப் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மேரிலாண்ட் முன்னாள் துணைச் செயலாளர் டாக்டர்.ராஜன் நடராஜன், வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜாராம் சீனுவாசன் ஆகியோர் வெளியிட்டனர். இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் பெற்றுக்கொண்டனர்.

வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் இந்த பாடல் வெளியீடு நடைபெற்றது. ‘விஷார்ப்’ வசீகரன் இசையமைத்துள்ளார். தை தை பொங்கலு தரணி எங்கும் பொங்குது என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு ‘விஷார்ப்’ வசந்த் வசீகரன் இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகளை மணிகண்டன் ஆனந்த்ராஜ், ச.பார்த்தசாரதி, நிதிலசெல்வன் முத்துசாமி, யோகராஜ் சொக்கலிங்கம், மகேந்திரன் பெரியசாமி, ராஜேஷ் சுவாமிநாதன், ராஜாராம் ஸ்ரீனிவாசன், ஐயப்பன் ராமன் ஆகியோர் கூட்டாக எழுதியுள்ளனர்.

பாலாஜி பிரகாஷ்ராவ், ஹரிணி வாசுதேவன்,ஜெயலட்சுமி ராதாகிருஷ்ணன் பாடியுள்ளார்கள். இளைஞர்கள், பெரியவர்கள் உட்பட அமெரிக்கத் தமிழர்கள் பலரும் நடனம் ஆடியுள்ளார்கள். ச.பார்த்தசாரதி வடிவமைத்து ஒருங்கிணைத்துள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!