பத்து மாவட்ட நிர்வாகிகளுடன் மதுரை ரஜினி ரசிகர்களின் முப்பெரும் விழா... 5 ஆயிரம் பேர்களுக்கு சமபந்தி விருந்து! - VanakamIndia

பத்து மாவட்ட நிர்வாகிகளுடன் மதுரை ரஜினி ரசிகர்களின் முப்பெரும் விழா… 5 ஆயிரம் பேர்களுக்கு சமபந்தி விருந்து!

மதுரை : மதுரை மாவட்ட திராவிட கலைத்தென்றல் ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் ரஜினியின் பிறந்த நாள் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. மன்றத்தின் 30 வது ஆண்டு விழா,மும்மத வழிபாடு, ஏழை எளியோர்க்கு நலத்திட்டங்கள் என முப்பெரும் விழாவாக கொண்டாடப் பட்டது.

முன்னதாக, டிசம்பர் 11ம் தேதி மாலை 5 மணிக்கு மதுரை நரிமேடு SSI சர்ச்சிலும், கோரிப்பாளையம் பள்ளிவாசலிலும் ரஜினியின் நலம்வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. அடுத்த நாள் காலை 6 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சனையும், அபிஷேகமும், பிரார்த்தனையும் நடைபெற்றது

டிசம்பர் 12ம் தேதி காலை 7 மணியளவில் செல்லூர் 60 அடி ரோட்டில் உள்ள அரசு முதியோர் இல்லத்தில், 33 ஆண்கள், 10 பெண்கள், 7 சிறுவர்களுக்கு புத்தாடை வழங்கி, காலை உணவும் மதியம் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 8 மணியளவில் செல்லூர் 60 அடி ரோட்டில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அன்று பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தங்கமோதிரம், ஹார்லிக்ஸ், பழங்கள் வழங்கப்பட்டது.

காலை 11 மணியளவில் செல்லூர் 50 அடி ரோட்டில் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டு 5 ஆயிரம் பேர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு துவங்கிய இந்த சமபந்தி விருந்து மாலை 4:30 மணி வரையிலும் நீடித்தது.

முப்பெரும் விழாவை 12ம் தேதி மாவட்ட நிர்வாகி M.M.முத்துப்பாண்டியன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் S.ஜாபர் முன்னிலையில் ஏடிஎஸ்பி S.குமாரவேல் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

டிசம்பர் 17ம் மாலை 6 மணியளவில் செல்லூர் 50 அடி ரோட்டில், பத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை மாவட்ட நிர்வாகி M.M.முத்துப்பாண்டியன் தலைமையில் மதுரை மாவட்ட பொறுப்பாளர் S.ஜாபர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

மாற்று திறனாளிகள் மூன்று நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், சலவை தொழிலார்கள் பத்து நபர்களுக்கு பித்தளை அயர்ன் பாக்ஸ், 500 ஆண்களுக்கு வேஷ்டிகள், 500 பெண்களுக்கு சேலைகள், பள்ளி மாணவ மாணவிகள் 500 நபர்களுக்கு நோட்டுப்புத்தகங்களோடு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் RP.பாலநமச்சிவாயன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் இப்ராஹிம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், SM.தம்புராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் AXW. டக்ளஸ், தேனி மாவட்டத் தலைவர் ஜெய் புஷ்பராஜ், செயலாளர் பொன் சிவா, சிவகங்கை மாவட்டத் தலைவர் கல்லல் M. ரவிக்குமார், பொறுப்பாளர் C.மோசஸ்குமார், மானாமதுரை நகர தலைவர் M.ஆறுமுகம், ஒன்றியத்தலைவர் CP. ராஜா, திருநெல்வேலி மாவட்டத் தலைவர்பானுசேகர் மற்றும் வில்லிவாக்கம் சுகுமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்

பதினைந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து ரஜினியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடிய இந்த விழா, மதுரை மாநகர மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மன்ற நிர்வாகிகளை பாராட்டியுள்ளார்கள் .

மதுரை மாவட்ட நிர்வாகிகள் P. அழகர், தளபதி பால்பாண்டி , T.பாலன் VP.முருகன், P.கணேசன், TS.வீரா, M. அண்ணாதுரை, R.ரஜினி மாரி, A.பாலா மன்ற நிர்வாகிகள் V.ராஜா, MM.சங்கர், A.புஷ்பராஜ், N.சுரேஷ், G.முத்துப்பாண்டி, M. பாலகுரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!