மல்டிப்ளெக்ஸ்களில் நடக்கும் பாப்கார்ன் கொள்ளை... ஒரு பார்வையாளனின் குமுறல்! - VanakamIndia

மல்டிப்ளெக்ஸ்களில் நடக்கும் பாப்கார்ன் கொள்ளை… ஒரு பார்வையாளனின் குமுறல்!

டிவி, யூடியூப், மொபைல், டிவிடி, திருட்டு டிவிடி, இதையெல்லாம் தாண்டி குடும்பத்தோட படம் பார்க்க தியேட்டர் வர்றதுங்கிறது எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா? வெறுமனே பாப்கார்னும் பப்சும் வாட்டர்பாட்டிலும் வாங்க உங்க தியேட்டருக்கு எவனும் வரமாட்டான்… டியர் மல்டிபிளெக்ஸ் மங்காஸ்.

நேற்று இரண்டாவது முறையாக ஆண்டவன் கட்டளை படத்திற்கு குடும்பத்தோட போனேன்… மொத்தம் 7 டிக்கெட். 840 ரூபாய். வேளச்சேரில இருக்கிற பி.வி.ஆர். மல்டிபிளெக்ஸ் தியேட்டருக்கு.

படம் பார்த்துட்டு வந்து என் மனைவி கேட்கிறாங்க… ‘ஏன், அந்த படம் சரியா தெரியல. வெளிறிப்போய் தெரியுது… எடுத்ததே அப்டியா?’ன்னு.

அடேய்… 120 ரூவா டிக்கெட் போனா பரவாயில்ல, நல்லா பார்ப்போம்னு நம்பித்தான்டா உங்க பார்க்கிங் கொடுமை, பாப்கார்ன் கொடுமை, குடிக்கிற தண்ணியில கூட நீங்க பண்ற கொடுமையை கண்டுக்காம விடுறோம். படத்தை மட்டுமாவது ஒழுங்கா காட்ட மாட்டீங்களாடா? ரெண்டரை மணி நேரம் படம் போடுறதுக்கு முன்னாடி ஒண்ணரை மணி நேரத்துக்கு விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறீங்களேடா…. அதையெல்லாம் பொறுத்துக்கிட்டுத்தானடா படம் பார்க்க வரோம். ஓரளவுக்காவது குவாலிட்டியா படம் போடுங்கப்பா… உங்களுக்கு புண்ணியமா போகும். ஏ சென்டர்ல போகுது… பி அண்ட் சி சென்டர்ல போகல…. அங்க போகுது இங்க போகலன்னு ஒரு படத்தை ஓட வைக்கிறதுக்கு பின்னாடி ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கு… இதுல, இப்டி நீங்க அரையும் கொறையுமா படம் காட்டுனா வேற என்ன நடக்கும். ஏற்கனவே விஜய்சேதுபதி ப்ரோ ரொம்ப ‘கலரா’ தெரிவாரு. இதுல நீங்க உங்க பங்குக்கு டல் பண்ணதுல பாவம்!

ரெகுலர் 190 ருவா. லார்ஜ் 240 ருவா. வேற என்ன பாப்கார்ன்தான்… சரி குழந்தை ஆசைப்பட்டு கேட்குதேன்னு 240 ருவா குடுத்து வாங்குனா… கண்டமேனிக்கு உள்ளுக்குள்ள எதை எதையோ கொட்டித் தராங்க… உப்புன்னா உப்பு அப்டி ஒரு உப்பு. த்தூ. கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்… நம்பி வரவனை மதிக்கணும். ச்சீய்…. சொல்லவே கேவலமா இருக்கு.

வாட்டர் பாட்டில் கேட்டா… ஏதோ ஒரே ஒரு கம்பெனி, ஹிமாலயா தான் அவங்க விப்பாங்களாம். அரை லிட்டர் இருக்கும். அதுக்கு 50 ரூவா…. நம்ம ஊர் பாஷையில நாலு மடக்கு தண்ணி.. ஒரு மடக்கு தண்ணிக்கு பத்து ரூவா வச்சா கூட, 40 ருவாயே ரொம்ப ரொம்ப அதிகம்டா நல்லவனுங்களா…!

மத்தவங்களோட ஒப்பிடுறப்போ கமலா தியேட்டர்ல ஸ்நாக்ஸ் விலை ரொம்ப கம்மி.. கண்டிப்பா அதுக்கு அவங்களை பாராட்டணும். அதே மாதிரி இந்த பேலஸோவா, பலாஸோ வா… அந்த தியேட்டர்ல சீட் ரொம்ப சௌகர்யமா இருக்கு. இந்த தியேட்டர்ல மட்டும்தான் கால் இடிக்காம கடைசி சீட்டுக்கு தாராளமா யோயிட்டு வரமுடியும்… இந்த ரெண்டு விசயத்துக்காக இந்த ரெண்டு தியேட்டர்காரங்களையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கேன்.

சின்னச் சின்ன தியேட்டருக்கு போனா, திரையில் காட்சிகள் சரியா இருக்காது… சவுண்ட் சரியா இருக்காதுன்னா தான் மல்டிபிளெக்ஸ் தியேட்டருக்கு வரோம்.
#ஆண்டவன்கட்டளை படத்துல #விஜய்சேதுபதி வாடகை வீட்டு ஓனர் கிட்ட சொல்வாரு… “வீடுன்னா கரெண்ட் இழுக்கணும்… தண்ணி பைப் மாட்டணும்.. பல்ப் போடணும்…. அதெல்லாம் செஞ்சா தான் அதுக்குப் பேர் வீடு.. அதுக்கும் சேர்த்துதானே வாடகை வாங்குறீங்க”ன்னு….

அதே மாதிரி… தியேட்டருன்னா… நல்ல சீட் வேணும்… நல்லா படம் தெரியணும்… நல்லா சவுண்ட் இருக்கணும்… அதைத்தான நாங்க கேட்குறோம். அதானே தியேட்டரு. அதுக்குத்தான டிக்கெட்டுக்கு காசு வாங்குறீங்க…
நல்லா பாப்கார்ன் வேணும்… எஸ்கலேட்டர் வேணும்… சும்மா தியேட்டருக்கு வெளியே நல்லா தண்ணியடிக்கிற பார் மாதிரி லைட் போட்டு ஏமாத்தணும்…னு நாங்க கேட்டமா? கூல் டிரிங்ஸ்ங்கிற பேர்ல பூச்சி மருந்தை விக்கிறதைக்கூட நாங்க ஏன்னு கேக்கலியேப்பா… அதை ஸ்டேட்டசுன்னு நெனைச்சு ஸ்டைலா உள்ள ஊத்துறோம்… அதைக்குடிச்சு குடிச்சே கேரளாவுல ஒரு சினிமா இயக்குநர் சீக்கிரமா போய்ச் சேர்ந்துட்டாரு.

அடேய்… சங்கிலில தொங்குற டம்ளரை எடுத்து தண்ணி பிடிச்சு குடிச்சிட்டு(ஓசியில), ரெண்டு ருவாய்க்கு அரிசு முறுக்கோ, பருப்பு வடையோ, கடலை மிட்டாயோ வாங்கித் தின்னுட்டு, ஒரு கருப்புக்காப்பியைக் குடிச்சிட்டு… இல்லண்ணா காளி மார்க் கலரைக்குடிச்சிட்டு, அதுவும் இல்லண்ணா அம்பது பைசாவுக்கோ ஒரு ருவாய்க்கோ ஐஸ் வாங்கி சூப்பிட்டு, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமலை எல்லாம் பாத்தவங்கடா நாங்க… இளையராசாவோட அன்னக்கிளி படத்தையெல்லாம், கதவு திறந்து கிடக்கிற தியேட்டர்ல காத்து வாங்கிக்கிட்டே ரசிச்சவங்கடா!

என்னமோ நீங்க தான் சினிமாவை கண்டுபிடிச்ச மாதிரி ரொம்ப பண்ணாதீங்கடா டேய்… வயித்தெறிச்சலா இருக்கு. நாங்கல்லாம் சபிச்சோம்னோ நல்லா இருக்க மாட்டீங்கடா… தயவு செஞ்சி இந்த தண்ணி, பாப்கார்ன், ஸ்நாக்குசு… இதுல காசு பார்க்க அலையாதீங்க… அதோட வாங்குற காசுக்கு ஓரளவுக்கு குவாலிட்டியா படம் காட்டுங்க.

படம் பார்த்தது நேத்து நைட்டு. இப்ப வரைக்கும் வயித்துப்பக்கம் சூடாவே இருக்கு… வயித்தெறிச்சல் அப்டி!

– முருகன் மந்திரம்

திரைப் பாடலாசிரியர்

Lyricist Murugan Manthiram blasting the Chennai multiplex screens for poor quality of screening.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!