Lawrence about Rajini politics

ரஜினி கொள்கையை அறிவித்த பின் மற்ற அரசியல்வாதிகளுக்கு தலை சுற்றும்! – லாரன்ஸ்


தூத்துக்குடி: கட்சியின் பெயர், கொடி, கொள்கையை ரஜினி அறிவித்த பிறகு மற்ற அரசியல்வாதிகளுக்கு தலைசுற்றும் என்று ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனால் இவர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் கட்சி, கொள்கைகள் பற்றி ராகவா லாரன்ஸ் கூறுகையில், “கட்சியின் பெயர், கொடி, கொள்கையை ரஜினி அறிவித்த பிறகு மற்ற அரசியல்வாதிகளுக்கு தலைசுற்றும். தமிழக அரசியலின் காட்சிகளே மாறும்.

ரஜினி வந்ததும் அரசியல் எளிமையாக இருக்கும், அரசியல் சுத்தமாகும். அவரது காவலனாக நான் என் பணியைத் தொடர்வேன்,” என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!