ஆர்.எஸ்.எஸ்-க்கு போட்டியாக டி.எஸ்.எஸ்… பீகாரில் லாலு பிரசாத் யாதவ் மகன்களின் பதிலடி - VanakamIndia

ஆர்.எஸ்.எஸ்-க்கு போட்டியாக டி.எஸ்.எஸ்… பீகாரில் லாலு பிரசாத் யாதவ் மகன்களின் பதிலடி

பாட்னா: பீகாரில் ஆர்.எஸ்.எஸ்-ஐ காலூன்ற விடமாட்டோம் என்று லாலு பிரசாத் யாதவின் மகன்கள் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

தர்மனிபெக்ஷா(Secular) சேவக் சங்க் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பை டி.எஸ்.எஸ் (DSS) என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

லாலுவின் மகனும், பீகாரில் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும் மதவாத வெறித்தனத்தை உருவாக்க முயல்கிறார்கள்.. அதை வேரூன்ற விடாமல் முறியடிப்போம் என்று கூறியுள்ளார்.

மதரீதியாக பிரிவினைவாதத்தை தூண்டும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் டி.எஸ்.எஸ் தக்க பதிலடி கொடுக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர். ஆனாலும் அவர்களை பாஜக தாங்கிப் பிடிக்கிறது.

குறுகிய புத்தி கொண்ட அவர்களிடம் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்.
இந்துக்களை மட்டுமே ஆதரிக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் ஆகும்.

பிற மதத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை, ஆர்.எஸ்.எஸ்ஸின் தந்திரங்கள் பீகாரில் பலிக்காது என்றும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் தான் தேஜஸ்வியும் அவருடைய சகோதரரும், பீகார் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவும் டி.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்கினார்கள்.

முதலில் பீகாரிலும் பின்னர் நாடெங்கிலும் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக டி.எஸ்.எஸ் நடவடிக்கைகள் எடுக்கும் என்ரும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Bihar Deputy Chief Minister Tejashwi Yadav and his brother minister Tej Pratap singh have formed a new organization called Dharmanipeksha Sevak Sangh(DSS) against the activities of RSS. They claimed DSS will act to counter the activities of RSS’s religious divisive ideology. It is to be noted that both these yadavs are sons of Lallu Prasad Yadav.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!