கும்ப்ளே ராஜினாமா: சமூக வலைதளத்தில் கோலியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா படு தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளேவை நீக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவலை பிசிசி சில தினங்களுக்கு முன் உறுதி செய்தது. அனில் கும்ப்ளே, தனது அறிக்கையில் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தையை பிசிசி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கும்ப்ளேவின் விலகலை கண்டித்து ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கும்ப்ளேவிற்கு ஆதரவாகவும் கோலிக்கு எதிராகவும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *