கொடிவீரன் விமர்சனம் - VanakamIndia

கொடிவீரன் விமர்சனம்

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ளது கொடிவீரன். குட்டிப்புலிக்குப் பிறகு இருவரும் சேர்ந்துள்ள இந்தப் படம் வெற்றி வாகை சூடியதா?

தனது சிறுவயதிலேயே அம்மாவை இழந்த சசிகுமார் தன் தங்கையே உலகம் என வாழ்ந்து வருகிறார். தன் தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு பாசக்கார அண்ணன் சசிகுமார். இவர் ஒருபுறம் இருக்க,

தன் தங்கை, அவளுடைய கணவர் இருவருக்காக கொலை குற்றத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பசுபதி ஒருபுறம். இவர் தப்பான தொழில் செய்து வருபவர். சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்து தன் தங்கை கணவருக்காக மீண்டும் ஒரு கொலை செய்கிறார் பசுபதி.

இதனால் கோபம் கொண்ட வருவாய்துறை அதிகாரி வினோத், பசுபதியை மீண்டும் சிறையில் தள்ள போராடுகிறார். இதனால் பசுபதி விதார்த்தை கொல்ல துடிக்கிறார். ஒருகட்டத்தில் சசிகுமாரின் தங்கையை விதார்த் திருமணம் செய்து கொள்ள, தனது தங்கையின் கணவன் உயிரை பசுபதியிடம் இருந்து சசிகுமார் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

சசிகுமாருக்கு கிராமத்து கெட்-அப் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இதை நாம் பல படங்களில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இந்த படத்திலும் இவருடைய கதாபாத்திரமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தான் இருக்கிறது.

தன் தங்கைக்காக எதையும் செய்யும் தைரியம், தன் மச்சானுக்காக எதிரிகளை வெட்டி சாய்க்கும் வீரம் என தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கியுள்ளார். படம் முழுவதும் அனைவரும் பஞ்ச் டயலாக் பேசுவது கொஞ்சம் அலுப்பை தட்டுகிறது. முத்தையாவின் மிகப்பெரிய பலமே வசனங்கள் தான். இதில் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கிறது.

படத்தின் மிகப்பெரும் பலமே செண்டிமெண்ட் காட்சிகள் தான்.

ரகுநந்தன் இசையும் நம்மை அப்படியே அந்த காட்சிகளுக்குள் இழுத்து செல்கின்றது, பின்னணியில் அசத்தியுள்ளார். கதிரின் ஒளிப்பதிவு பலம்.

கொடிவீரன் – குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!