கதிராமங்கலம் பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்; உயர்நீதிமன்றம் வழங்கியது! - VanakamIndia

கதிராமங்கலம் பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்; உயர்நீதிமன்றம் வழங்கியது!

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜூன் 30 ஆம்தேதி நடந்த போராட்டத்தின் போது 3 போலீசார் மற்றும் போலீஸ் வாகனமும் சேதமடைந்தது.

சம்பவத்திற்கு பிறகு பேராசிரியர் ஜெயராமன் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 9 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பு வக்கீல், ஓ.என்.ஜி.சி. வக்கீல் மற்றும் அரசு வக்கீல்கள் தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர்.

விவாதங்களை கேட்ட நீதிபதி பசீர் அகமது பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்திருந்தார்.

இன்று காலை நீதிபதி பசீர்அகமது, பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

பேராசிரியர் ஜெயராமன் மதுரை மாவட்ட கோர்ட்டிலும், மற்ற 7 பேர் திருச்சி மாவட்ட கோர்ட்டிலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!