நான் வயசுக்கு வராத அரசியல்வாதி! - கமல் ஹாஸனின் ட்விட்டர் அறிக்கை - VanakamIndia

நான் வயசுக்கு வராத அரசியல்வாதி! – கமல் ஹாஸனின் ட்விட்டர் அறிக்கை

இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்

*இந்தி திணிப்புக்கு எதிராக என்றைக்கு குரல் கொடுத்தேனோ அன்றே நான் அரசியல்வாதி தான்.

ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறு, அரசியலுக்கு வா எனக் சொல்பவர்கள், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்

* ஊழல் குறித்த ஆதாரங்களை இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்க மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

*டிஜிட்டல் யுகம் என்பதால் ஊழல் குறித்த ஆதாரங்களை டிஜிட்டலாக பதிவு செய்யவேண்டும்.

*ஊழல் குறித்த விவரங்களை www.tn.gov.in.ministerslist-இல் அனுப்பலாம்.

*ஊழல் குறித்த இணையதளத்தில் மக்களே குரல் கொடுக்க வேண்டும்.

*எல்லா துறைகளுக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள், என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

கேள்வி கேட்பவர்களை கைது செய்யும் அளவுக்கு தென்னகத்தில் சிறைகள் இல்லை.

*துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

*ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் மறந்திருந்தால் நினைவு படுத்த மக்கள் இருக்கிறார்கள்.

*சினிமாவுக்கு வரிவிலக்கு பெற என்னைப்போல் சிலரை தவிர மற்றவர்கள் பயந்து லஞ்சத்துக்கு உடைந்தை.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!