உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத கமல் ஹாசன்! - VanakamIndia

உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத கமல் ஹாசன்!

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் சொன்னது உலகநாயகன் கமலுக்கு புரியவில்லையா அல்லது புரிந்தும் ஏற்றுக்கொள்ள மனமில்லையா?
ஏற்றுக் கொள்ளும் மனமும் பக்குவமும் கமல் ஹாசனுக்கு இல்லை என்பதைத்தான் ஆனந்த விகடனில் அவர் அளித்திருக்கும் விளக்கம் காட்டுகிறது.

ரஜினி சொன்னது சிவாஜி என்ற ஒரு நடிகர் அரசியலில் தோற்றார் என்பதைப் பற்றி. அம்பேத்கர், காமராஜரின் அரசியல் தோல்வியைப் பற்றி ரஜினி பேசவில்லை.

சிவாஜி தோற்றது வேறு. காமராஜர் தோற்றது வேறு. சிவாஜி தன் சொந்தத் தொகுதியில் எம்.எல்.ஏவாகக் கூட வெற்றி பெறமுடியவில்லை என்பதைக் குறிப்பிட்டார் ரஜினி.

காமராஜர் 9 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தவர். தமிழகத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியவர். முதலமைச்சர் பதவியை பக்தவச்சலத்திற்கு விட்டுக் கொடுத்து விலகியவர். அவர் தோல்வியுற்றது 1967ம் ஆண்டு விருது நகர் சட்டமன்றத் தேர்தலில் மட்டும் தான்.

ஆனாலும், அதே ஆண்டு நாகர்கோவில் பாராளுமன்ற இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று டெல்லி சென்றார். காமராஜரின் விருது நகர் தோல்வியைப் பற்றி யாரும் கூறுவதில்லை. அவருடைய ஆட்சியின் சாதனைகளைத் தான் கூறுகிறார்கள். மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று எல்லா கட்சிகளுமே சொல்கிறார்கள்

சிவாஜி போல் அரசியல்வாதி ஆவோம் என்றும் யாரும் சொல்கிறார்களா? அவர் அரசியல்வாதியாக இருந்தார் என்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள்.

சிவாஜியைப்போல் ஆகாமல் இருந்துகொள்ளுங்கள் என்று சூசகமாக தன் நண்பருக்கு அறிவுறுத்தியுள்ளார் ரஜினி. ஆனால் அதை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லையா அல்லது நடிக்கிறாரா என்று தெரியவில்லை.

கமல் ஒன்றும் காந்தி, காமராஜர் போன்ற தலைவர் இல்லையே. சாதாரண சினிமா நடிகர் தானே. ரஜினியும் ஒரு நடிகர் தான். ஆனால் நடிகர் என்ற இமேஜை மீறி ஒரு விஷயம் ரஜினிக்கு மக்களிடத்தில் இருக்கிறது. அது தானாக உருவானது.

அதை கமல் இனிமேல் தான் உருவாக்கவேண்டும். அதைத்தான் சமீபகாலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வெளியிலும் உருவாக்க முயற்சி செய்தார்.

அரசியலில் வெற்றி பெறும் சூட்சமம் தனக்குத் தெரியாது என்றும் கமல் ஹாசனுக்கு தெரிந்திருக்கலாம் என்றும் ரஜினி கூறினார். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் ஒரு வேளை சொல்லியிருப்பார் என்றும் சொன்னார்.

தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்பவன் தான் அனைத்தும் அறிவான். மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தனக்குத் தெரியாது என்று ரஜினி சொன்னார்.!

– ஆனந்த் குமார்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!