ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு... இந்தியாவைப் பெருமையடையச் செய்வதாக கமல் சூளுரை! - VanakamIndia

ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு… இந்தியாவைப் பெருமையடையச் செய்வதாக கமல் சூளுரை!


சென்னை: நடிகர் கமல் ஹாஸன் இன்று திடீரென ரசிகர்களைச் சந்தித்தார்.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அவர் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது சுற்றுப்பயண ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். பிப்ரவரி 10-ந் தேதி கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக அங்கு செல்கிறார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் கமலின் சுற்றுப்பயண விவரம் முழுமையாக
அறிவிக்கப்படுகிறது.

சூளுரை

பின்னர் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல் ஹாஸன், “இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். என் சுற்றுப் பயணத்தின்போது நிறைய சகோதரர்கள் கிடைப்பார்கள். என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய வைப்பேன்,” என்றார்.

– வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!