Kamal Haasan's request to Chief Minister

தயவாய் பேச்சு நடத்துங்கள் முதல்வரே! – மீண்டும் ஆரம்பித்த கமல்ஹாஸன்


சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில் கொண்டு தயவாய் பேச்சு நடத்துங்கள் என்று தமிழக முதல்வருக்கு நடிகர் கமல் ஹாஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் திடீர் ஸ்ட்ரைக்கை நடத்தி வருகின்றனர். இதனால் மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும், விலைமதிப்பிலா பரிசாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு கமல் ட்விட்டரில் அரசியல் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!